"இலங்கை தொடருந்து போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==1858 ஆகஸ்ட் 3ல் ஆரம்பம்==
கம்பனியின் ஒப்பந்தக்காரரும் பொறியியலாளருமான டப்ளியு. டி. டோனி (W.T. Doyne) என்பவர் தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றார். [[1858]] [[ஆகஸ்ட் 3]]ம் திகதி அப்போதைய ஆளுனர் சர். ஹென்றி வோர்ட் கொழும்பில் பிரதான தொடர்வண்டி நிலையம் இப்போது அமைந்துள்ள இடத்தில் நிலத்தை வெட்டி நிர்மாண வேலைகளைக் கோலாகலமாக ஆரம்பித்து வைத்தார்.
 
எனினும், உத்தேசிக்கப்பட்ட செலவில் வேலையை முடிக்க முடியாது என்பது விரைவில் நிரூபணமாகியது. களனி நதியின் மீதாகப் பாலம் அமைப்பதும் ரம்புக்கனை முதல் கடுகன்னாவை வரையுள்ள ஏற்றத்தில் தண்டவாளங்களைப் பொருத்துவதும் பெரும் சவால்களாக அமைந்திருந்தன. எனவே மேலதிக நிதி தேவை என டோனி விண்ணப்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/682314" இருந்து மீள்விக்கப்பட்டது