கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி கட்டுரையைப் பிரித்தல்
வரிசை 45:
*[[திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312]]
*[[திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 313-476]]
*[[திருச்சபைதிருச்சபையின் வரலாற்றின் நடுக்தொடக்க காலம்: கி.பி. 80477-1453799]]
*[[திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 800-1453]]
*[[திருச்சபை வரலாற்றின் நடுக் காலம்: கி.பி. 1454-1600]]
*[[திருச்சபை வரலாற்றின் நவீன காலம்: கி.பி. 1600-1800]]
வரி 52 ⟶ 53:
*[[திருச்சபை வரலாற்றின் தற்காலம்: கி.பி. 21ஆம் நூற்றாண்டு]]
 
 
==இயேசு திருச்சபையை நிறுவுகிறார் - கி.பி. சுமார் 33 ஆண்டு வரையிலான நிகழ்வுகள் ==
{{Main|இயேசு கிறித்து}}
(தொடர்ச்சி): [[திருச்சபை உருவாதல்: கிறித்து பிறப்பு முதல் கி.பி. 33 வரை]]
[[Image:Christ pantocrator daphne1090-1100.jpg|thumb|right|225px|மக்களுக்குப் போதனை வழங்கும் இயேசு. கற்பதிவுக் கலை. கி.பி. 6ஆம் நூற்றாண்டு. ஏத்தன்சு.]]
 
 
*கி.மு. சுமார் 6ஆம் ஆண்டிலிருந்து 4ஆம் ஆண்டுக்குள்: [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|இயேசு பிறப்பு]]. லூக்கா நற்செய்திப்படி, இயேசு பெத்லகேமில் பிறந்தார். அப்போது பேரரசர் அகுஸ்து சீசர் உரோமைப் பேரரசராகவும், அவரது ஆளுகையின்கீழ் யூதேயாவில் ஏரோது மன்னனும் ஆண்டனர். இயேசு கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். மரியா தூய ஆவியின் வல்லமையால் கருவுற்றிருந்தார். இயேசு கடவுளின் மகன் என்று கிறித்தவர்களால் போற்றி வணங்கப்படுகிறார்.
 
 
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. கி.பி. 5-6ஆம் நூற்றாண்டளவில் சிரியாவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி, ''ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு'' (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கினார். ஆனால், அவர் கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.
 
 
*கி.பி.சுமார் 27ஆம் ஆண்டு: இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். தம் பொதுப்பணியைத் தொடங்குகிறார். தம்மோடு இருந்து, தம் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்கத் தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது <sup>(காண்க: லூக்கா 3:1)</sup>. இது கி.பி. 27/28ஆம் ஆண்டு என்று கொள்ளலாம். ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார். [[புனித பேதுரு|பேதுருவின்]] பெயர் நற்செய்தி நூல்களில் அடிக்கடி வருகிறது. இயேசு பேதுருவுக்குச் சிறப்பிடம் அளித்ததும் தெரிகிறது. பன்னிரு திருத்தூதரிடையே பேதுரு முதலிடம் பெறுகிறார். இயேசுவின் வாழ்வு நிகழ்ச்சிகளில் செபதேயுவின் மக்களாகிய யாக்கோபு, யோவான் ஆகிய இருவரோடு பேதுருவும் பங்கேற்கிறார். இயேசு மக்களுக்குப் போதனை வழங்குகிறார். குறிப்பாக அவர் போதித்த ''மலைப்பொழிவு'' சிறப்பு மிக்கது <sup>(மத்தேயு 5:1-7:29; லூக்கா 6:20-49)</sup>. இயேசு [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] பல புரிகிறார். ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளிக்கிறார்; இறந்தோருக்கு உயிரளிக்கிறார்; தண்ணீர்மீது நடக்கிறார்.
 
 
*கி.பி. சுமார் 33ஆம் ஆண்டு: இயேசுவே யூத மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்று [[புனித பேதுரு|பேதுரு]] அறிக்கையிடுகிறார். இயேசு ஆடம்பரமாக எருசலேம் நகருக்குள் நுழைகிறார். கெத்சமனித் தோட்டத்தில் சொல்லொண்ணா வேதனை அடைகிறார். யூதாசு இஸ்காரியோத்து என்னும் சீடர் இயேசுவை அவர்தம் எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்கிறார். அவரைக் கொடுமையாகத் துன்புறுத்துகிறார்கள். யூதேயாவில் பொந்தியு பிலாத்து ஆளுநராக இருந்த காலத்தில் யூதர்களின் தலைமை மன்றம் இயேசு கடவுளைப் பழித்தார் என்று குற்றம் சாட்ட, பிலாத்து இயேசுவுக்கு [[இயேசுவின் சாவு|மரண தண்டனை]] விதிக்கிறார். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கிறார். அப்போது திபேரியு உரோமைப் பேரரசன், ஏரோது அந்திப்பா யூதேயாவின் அரசன், கயிபா தலைமைக்குரு. சிலுவையில் உயிர்துறந்த இயேசுவைக் கல்லறையில் அடக்குகிறார்கள். ஆனால், அவர் மூன்றாம் நாள் இறந்தோரினின்று உயிர்பெற்றெழுந்தார் என்று அவர்தம் சீடர் அறிக்கையிடுகிறார்கள். [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த இயேசு]] அவர்களுக்குத் தோன்றியதாகவும் பறைசாற்றுகிறார்கள். நாற்பது நாள்கள் கழிந்து இயேசு கடைசி முறையாகத் தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்கள் உலகின் கடை எல்லைவரை சென்று, தம் செய்தியை அறிவிக்க வேண்டும் என்றும், எல்லாரையும் தம் சீடராக மாற்ற வேண்டும் என்று கூறி அவர்களை விட்டுப் பிரிந்து விண்ணேகுகின்றார். பிரிந்துசெல்லுமுன், "இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று வாக்களித்துச் செல்கின்றார் <sup>(மத்தேயு 28:20)</sup>. பத்து நாள்கள் கழிந்தபின், தூய ஆவி இயேசுவின் சீடர்மீது இறங்கிவருகிறார். சுமார் 3000 மக்கள் இயேசுவில் நம்பிக்கை கொண்டு [[திருமுழுக்கு|திருமுழுக்குப்]] பெறுகிறார்கள்.
 
 
==தொடக்க காலக் கிறித்தவம் (கி.பி. 34 - கி.பி. 312) ==
 
*கி.பி. சுமார் 34ஆம் ஆண்டு: [[புனித ஸ்தேவான்]], கிறித்துவின் பொருட்டு உயிர்துறந்த முதல் மறைச் சான்றாளர் (martyr). எருசலேமில் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார் <sup>(திருத்தூதார் பணிகள் 6:8-7:60)</sup>
 
 
*கி.பி. சுமார் 34-36ஆம் ஆண்டு: இயேசுவின் சீடர்களைத் துன்புறுத்திய [[புனித பவுல்|சவுல்]] இயேசுவைக் காட்சியில் காண்கின்றார்; இயேசுவின் ஆர்வமிகு சீடராக மாறுகின்றார் <sup>(கலாத்தியர் 1:13-14; பிலிப்பியர் 3:6; திருத்தூதர் பணிகள் 8:1-3)</sup>
 
 
*கி.பி. சுமார் 50ஆம் ஆண்டு: எருசலேமில் திருச்சங்கம் கூடுகிறது. கிறித்துவின் சீடராக விரும்பி திருச்சபையில் இணைவோர் புற இனத்தவராயினும் யூத சமயத்தின் பழக்கங்களை (விருத்தசேதனம், உணவு சார்ந்த விதிகள் போன்றவை) கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்னும் முடிவு எடுக்கப்படுகிறது. கிறித்தவத்துக்கும் யூத சமயத்துக்கும் இடையே நிலவும் வேறுபாடு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது<sup>(காண்க:திருத்தூதர் பணிகள் 15:1-35)</sup>.
 
 
*கி.பி. சுமார் 52ஆம் ஆண்டு: உறுதியான மரபுப்படி, இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமா இந்தியா சென்று சேர்கிறார்.
 
 
*கி.பி. 64ஆம் ஆண்டு: உரோமை நகரில் நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்துகிறான்<ref>[http://en.wikipedia.org/wiki/Emperor_Nero நீரோ மன்னன்]</ref>. உரோமை நகர் தீக்கிரையானதற்கு கிறித்தவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். கிறித்தவர்கள் கி.பி. 313ஆம் ஆண்டுவரை பலமுறை துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.
 
 
*கி.பி. 70ஆம் ஆண்டு: தீத்து என்னும் உரோமைத் தளபதியும் உரோமைப் படைகளும் எருசலேம் கோவிலைத் தரைமட்டமாக்குகிறார்கள்; பலரைச் சிறைப்பிடிக்கிறார்கள்; எருசலேம் கோவிலிலிருந்து சூறையாடப்பட்ட பொருள்கள் உரோமைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
 
 
*கி.பி. சுமார் 72ஆம் ஆண்டு: உறுதியான மரபுப்படி, புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மயிலாப்பூரில் ஈட்டியால் குத்திக் கொல்லப்படுகிறார்.
 
 
*கி.பி. சுமார் 96ஆம் ஆண்டு: கொரிந்து நகர் திருச்சபைக்குப் போப்பாண்டவர் முதலாம் கிளெமென்று முதல் திருமுகம் எழுதுகிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_of_Clement போப்பாண்டவர் முதலாம் கிளெமென்று]</ref>.
 
 
*கி.பி. சுமார் 100ஆம் ஆண்டு: இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் இறுதியானவராக யோவான் எபேசு நகரில் இறக்கிறார்.
 
 
*கி.பி. சுமார் 110ஆம் ஆண்டு: இயேசுவின் திருச்சபை எல்லா இடங்களிலும் பரவிவருவதைக் குறிக்கும் விதத்தில் '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாகப் புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்பவர் பயன்படுத்துகிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/Ignatius_of_Antioch புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்]</ref>. இவர் அந்தியோக்கு நகரத் திருச்சபையின் ஆயர். திருச்சபையில் ஆயர்கள் தலைவர் ஆவர் என்று வலியுறுத்துகிறார். உண்மையான கிறித்தவக் கோட்பாட்டை ஏற்க மறுப்போரையும் யூத சமயப் பழக்கங்களைக் கிறித்தவத்தில் புகுத்துவதை ஆதரிப்போரையும் எதிர்க்கிறார்.
 
 
*கி.பி. சுமார் 150ஆம் ஆண்டு: '''பழைய இலத்தீன் பெயர்ப்பு''' (Vetus Latina) என்று அழைக்கப்படுகின்ற [[விவிலியம்|விவிலிய]] மொழிபெயர்ப்பு தோன்றுதல். கிரேக்கத்திலிருந்து பெயர்க்கப்பட்ட படைப்பு இது<ref>[http://en.wikipedia.org/wiki/Vetus_Latina விவிலியத்தின் பழைய இலத்தீன் பெயர்ப்பு]</ref>.
 
 
*கி.பி. சுமார் 155ஆம் ஆண்டு: கிறித்தவக் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்த மார்சியன் (பழைய ஏற்பாட்டுக் கடவுள் வேறு, புதிய ஏற்பாட்டுக் கடவுள் வேறு என்று கூறியவர்), வலந்தீனசு (மெய்யறிவுக் கொள்கையை ஆதரித்தவர்), மற்றும் மொந்தானுசு கொள்கை கிறித்தவ சமூகத்திடையே பிளவுகளைக் கொணர்கின்றன<ref>[http://en.wikipedia.org/wiki/Marcionism மார்சியன் கொள்கை]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Montanism மொந்தானுசு கொள்கை]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Valentinianism வலந்தீனியசு கொள்கை]</ref>. கிறித்தவரைத் துன்புறுத்தும் செயல் தொடர்கிறது.
 
 
*கி.பி. சுமார் 180ஆம் ஆண்டு: இரனேயசு என்னும் ஆயர் "வேற்றுக் கொள்கையினருக்கு எதிராக" என்னும் நூலை எழுதுகிறார். அக்கால உரோமைப் பேரரசின் கீழ் அமைந்த, இன்றைய பிரான்சு நாட்டின் லியோன் நகர, ஆயராகப் பணியாற்றிய இவர் மெய்யறிவுக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறார்<ref>[http://en.wikipedia.org/wiki/On_the_Detection_and_Overthrow_of_the_So-Called_Gnosis லியோன் நகர இரனேயசு]</ref>
 
 
*கி.பி. சுமார் 195ஆம் ஆண்டு: போப்பாண்டவர் முதலாம் விக்டர் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] திருவிழா யூதரின் நிசான் மாதத்தின் 14ஆம் நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்று வாதாடியவர்களைச் சபை நீக்கம் செய்கின்றார் <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Victor_I போப்பாண்டவர் முதலாம் விக்டர்]</ref>. திருச்சபை முறைப்படி, நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வரும் ஞாயிறு உயிர்த்தெழுதல் திருவிழா ஆகும். ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த முதல் [[போப்பாண்டவர்]] விக்டர் ஆவர். அவர் காலத்தில் திருப்பலி கிரேக்க மொழியிலிருந்து மாறி, இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது.
 
 
*கி.பி. சுமார் 200ஆம் ஆண்டு: தெர்த்தூல்லியன் (கி.பி. 160-220) என்னும் முதல் மாபெரும் இலத்தீன் இறையியல் வல்லுநர் [[கிறித்தவ இறையியல்]] கருத்துகளை எடுத்துரைக்க கீழே வருவதுபோன்ற பல இலத்தீன் சொற்களைப் புதிதாக ஆக்குகிறார்: ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கின்றார் என்பதைக் குறிக்க ''Trinitas'' ([[திரித்துவம்]], மூவொரு கடவுள்); தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ''ஆள்கள்'' (Personae) ''ஒரே பொருளாய்'' (consubstantialis/-es) இருக்கின்றார்கள். இச்சொற்கள் இறையியல் கோட்பாடுகளைத் துல்லியமாக வரையறுக்க இன்றுவரை பயன்படுகின்றன<ref>[http://en.wikipedia.org/wiki/Tertullian தெர்த்தூல்லியன்]</ref>.
 
 
*கி.பி. சுமார் 250ஆம் ஆண்டு: போப்பாண்டவர் ஃபேபியன் என்பவர் அக்கால ஃபிரான்சு நாட்டின் பல பகுதிகளுக்குக் கிறித்தவ மறைப் போதகர்களை அனுப்புகிறார் <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Fabian போப்பாண்டவர் ஃபேபியன்]</ref>.
 
 
*சனவரி 20, கி.பி. 250ஆம் ஆண்டு: உரோமைப் பேரரசின் டேசியசு (Decius) மன்னன் கிறித்தவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்குகிறான்<ref>[http://en.wikipedia.org/wiki/Decius டேசியசு மன்னன்]</ref>. போப்பாண்டவர் ஃபேபியன் கொல்லப்படுகிறார். கொடுமைகளுக்குப் பயந்து தம் கிறித்தவ நம்பிக்கையைக் கைவிட்டவர்களை மீண்டும் திருச்சபையில் சேர்ப்பது பற்றிய சர்ச்சை எழுகிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Donatism கிறித்தவ நம்பிக்கையைக் கைவிட்டோரை மீண்டும் ஏற்பது பற்றிய சர்ச்சை]</ref>.
 
 
*அக்டோபர் 20, கி.பி. 312ஆம் ஆண்டு: உரோமை நகர் மில்வியோ பாலத்தில் நடந்த போரில் கான்ஸ்டன்டைன் பேரரசன் வெற்றி பெறுகிறார். அவர் இயேசு கிறித்துவின் பெயரால் போரிட்டு வெற்றியடைந்தார் என்று மரபு கூறுகிறது<ref>[http://en.wikipedia.org/wiki/Constantine_I_(emperor) கான்ஸ்டன்டைன் பேரரசன்]</ref>. அவருடைய போர்வீரர்கள் ''கிறிஸ்து'' என்னும் சொல்லுக்கான கிரேக்க மூலத்தின் முதல் இரு எழுத்துக்களைத் தங்கள் கேடயங்களில் பொறித்துக்கொள்கின்றனர் (கிரேக்கம் ΧΡΙΣΤΌΣ = Christos. முதல் இரு கிரேக்க எழுத்துக்கள்: ΧΡ)<ref>[http://en.wikipedia.org/wiki/Labarum ΧΡ கிறிஸ்துவைக் குறிக்கும் சின்னம்]</ref>
 
 
==கி.பி. 313ஆம் ஆண்டு முதல் கி.பி. 476ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்==
[[Image:Constantine Musei Capitolini.jpg|thumb|200px|கான்ஸ்டன்டைன் பேரரசனின் பளிங்குச் சிலை. காப்பிடம்: உரோமை]]
*கி.பி. 313ஆம் ஆண்டு: கான்ஸ்டன்டைன் பேரரசன் '''மிலான் பேரறிக்கை''' (Edict of Milan) என்னும் சாசனத்தை அறிவிக்கிறார். அதன்படி, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயல் நிறுத்தப்படுகிறது. உரோமைப் பேரரசு கிறித்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அணிசாரா நிலையை மேற்கொள்கிறது. கிறித்தவர் தம் சமய நம்பிக்கையை அரசு தலையீடின்றிக் கடைப்பிடிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Edict_of_Milan மிலான் பேரறிக்கை]</ref>.
 
 
*கி.பி. 318ஆம் ஆண்டு: ஆரியுசு (Arius) என்பவர் திருச்சபையால் கண்டிக்கப்படுகிறார். இவர் எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவில் குருவாக இருந்தவர். இவர் கூறியது: ஒரே கடவுள் தந்தை, மகன், [[தூய ஆவி]] என்றிருந்தாலும், மகன் தந்தைக்கு நிகரானவர் என்றோ, நித்தியமாக நிலைத்திருந்தவர் என்றோ, தந்தையோடு "ஒரே பொருளாக" (consubstantial) உள்ளார் என்றோ கூறுவது தவறு. மகன் தந்தைக்குத் தாழ்ந்தவரே<ref>[http://en.wikipedia.org/wiki/Arianism ஆரியுசின் தப்பறைக் கொள்கை]</ref>. ஆரியுசின் கொள்கை தவறானது என்று திருச்சபை அறிவிக்கிறது.
 
 
ஆரியுசின் கொள்கையிலிருந்து திருச்சபையின் போதனை வேறுபடுகிறது. கிறித்தவக் கொள்கைப்படி, தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் கடவுள் தன்மை கொண்டவர்களே. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார். தந்தையோடு மகனும் நித்தியமாகவே இருக்கின்றார். இக்கொள்கையை வலியுறுத்தி நிலைநாட்டியோரில் முக்கியமானவர் புனித அத்தனாசியுசு (Saint Athanasius) ஆவார்<ref>[http://en.wikipedia.org/wiki/Athanasius புனித அத்தனாசியுசு]</ref>
 
 
*கி.பி. 321ஆம் ஆண்டு: திருச்சபை சொத்துக்களை உடைமையாகக் கொண்டிருக்க கான்ஸ்டன்டைன் மன்னர் உரிமை வழங்குகிறார். இலாத்தரானி குடும்பத்திற்கு உரிமையான அரண்மனையை மன்னர் கான்ஸ்டன்டைன் போப்பாண்டவர் மில்த்தியாடெசு <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Miltiades போப்பாண்டவர் மில்த்தியாடெசு]</ref> என்பவருக்கு அளிக்கிறார். அங்குக் கட்டியெழுப்பப்பட்ட "உலக மீட்பர் இயேசு" என்னும் பசிலிக்கா பெருங்கோவில் (Lateran Basilica) <ref>[http://en.wikipedia.org/wiki/Lateran_Basilica இலாத்தரன் பசிலிக்கா பெருங்கோவில்]</ref> போப்பாண்டவரின் உறைவிடமாகவும் அலுவலக இருப்பிடமாகவும் மாறுகிறது.
 
 
*கி.பி. 324ஆம் ஆண்டு, நவம்பர் 3ஆம் நாள்: உரோமைப் பேரரசின் கீழைப்பகுதியாகிய பிசான்சியம் (Byzantium) <ref>[http://en.wikipedia.org/wiki/Byzantium பிசான்சியம் பேரரசுப் பகுதி]</ref> என்னும் மண்டலத்தில் மன்னர் கான்ஸ்டன்டைன் புதியதொரு தலைநகருக்கு அடித்தளம் இடுகிறார். இதுவே பின்னர் கான்ஸ்டாண்டிநோப்புள் (Constantinople) <ref>[http://en.wikipedia.org/wiki/Constantinople கான்ஸ்டாண்டிநோப்புள்]</ref> என்னும் பெயரைப் பெற்றது.
 
 
*கி.பி. 325ஆம் ஆண்டு: ஆரியுசு என்பவரின் தப்பறைக் கொள்கை <ref>[http://en.wikipedia.org/wiki/Arianism ஆரியுசு தப்பறைக் கொள்கை] </ref> அலெக்சாந்திரியா நகரில் பல குழப்பங்களும் வன்முறையும் ஏற்பட காரணமாகிறது.
 
 
*கி.பி. 325ஆம் ஆண்டு: முதலாம் நிசேயா பொதுச் சங்கம் நிகழ்கிறது. இன்றைய துருக்கி நாட்டில் உள்ள ஈஸ்னிக் ( İznik ) என்னும் இடமே அன்று நிசேயா (Nicaea) அழைக்கப்பட்டது. சங்கத்தைக் கூட்டியவர் கான்ஸ்டன்டைன் பேரரசன். இப்பொதுச் சங்கத்தில் கிறித்தவ சமயத்தின் தலைவர்களாகிய ஆயர்கள் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியிலிருந்தும் கிழக்குப் பகுதியிலிருந்தும் கலந்துகொண்டனர். மூவொரு கடவுளாக விளங்கும் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் கடவுள் தன்மையில் "ஒரே பொருளாக" (consubstantial) உள்ளார்கள் என்னும் கொள்கை கிறித்தவத்தின் உண்மைக் கொள்கையாகப் பிரகடனம் செய்யப்பட்டது <ref>[http://en.wikipedia.org/wiki/Trinity தூய திரித்துவக் கொள்கை]</ref>. அதை எதிர்த்த ஆரியுசும் அவர்தம் ஆதரவாளர்களும் கண்டனம் செய்யப்பட்டார்கள். நிசேயா சங்கத்தில் "கிறித்தவ நம்பிக்கைத் திரட்டு" (Nicean Creed) தொகுக்கப்பட்டு கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடாக அறிவிக்கப்பட்டது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Council_of_Nicaea முதலாம் நிசேயா பொதுச் சங்கம்]</ref>.
 
 
*கி.பி. 326, நவம்பர் 18: வத்திக்கான் குன்றில் [[புனித பேதுரு]] திருத்தூதரின் கல்லறைமீது மன்னர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோவிலைப் போப்பாண்டவர் முதலாம் சில்வெஸ்டர் என்பவர் அர்ச்சிக்கிறார் <ref>[http://en.wikipedia.org/wiki/Basilica_of_St._Peter தூய பேதுரு பசிலிக்கா பெருங்கோவில்]</ref>.
 
 
*கி.பி. 380, பெப்ருவரி: உரோமை பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக கிறித்தவம் அறிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கையை மன்னர் முதலாம் தியொடோசியசு (Theodosius I) <ref>[http://en.wikipedia.org/wiki/Theodosius_I மன்னர் முதலாம் தியொடோசியசு]</ref> தெசலோனிக்கா நகரில் அறிவிக்க, அது கான்ஸ்தாந்திநோப்புள் நகரில் பிரகடனப்படுத்தப்பட்டது.
 
 
*கி.பி. 381ஆம் ஆண்டு: முதலாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் கூடுகிறது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Council_of_Constantinople முதலாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம்]</ref>.
 
 
*கி.பி. 382ஆம் ஆண்டு: போப்பாண்டவர் முதலாம் தாமசுசு (Pope Damasus I) <ref>[http://en.wikipedia.org/wiki/Damasus_I போப்பாண்டவர் முதலாம் தாமசுசு] </ref> என்பவர் உரோமையில் ஒரு சங்கத்தைக் கூட்டுகிறார். அச்சங்கம் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டையும்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Old_Testament பழைய ஏற்பாடு] </ref> [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டையும்]] <ref>[http://en.wikipedia.org/wiki/New_Testament புதிய ஏற்பாடு] </ref> உள்ளடக்கிய கிறித்தவத் திருவிவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தெந்த நூல்கள் அடங்கியுள்ளன என்பதை அறுதியாக வரையறுக்கிறது (விவிலியத் திருமுறை - Biblical Canon) <ref>[http://en.wikipedia.org/wiki/Biblical_canon விவிலியத் திருமுறை நூல்கள்] </ref>. அந்நூல்கள் தவிர வேறு எந்த நூலும் விவிலிய நூலாகக் கருதப்படமாட்டாது என்று அறிக்கையிடுகிறது.
 
 
*கி.பி. 391ஆம் ஆண்டு: கிறித்தவத்திற்கு முற்பட்ட பிற சமயங்களைச் சார்ந்த சடங்குகளைக் கடைப்பிடிப்பது சட்டமீறல் ஆகும் என்னும் அறிக்கையை மன்னர் முதலாம் தியொடோசியசு பிறப்பிக்கிறார். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையான மக்கள் கிறித்தவத்தைத் தழுவுகிறார்கள் <ref>[http://en.wikipedia.org/wiki/Theodosius_I மன்னர் முதலாம் தியொடோசியசு] </ref>.
 
 
*கி.பி. 400ஆம் ஆண்டு: புனித எரோணிமுசு (ஜெரோம்) <ref>[http://en.wikipedia.org/wiki/Jerome புனித எரோணிமுசு (ஜெரோம்)] </ref> என்பவர் எபிரேயத்திலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் பெயர்க்கப்பட்ட விவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பை வெளியிடுகிறார். ''வுல்காத்தா'' (Vulgata = Vulgate) என்று அழைக்கப்படும் இந்த மொழிபெயர்ப்பு "பொது மொழிபெயர்ப்பு" அல்லது "மக்கள் பெயர்ப்பு" என்னும் பொருளுடைத்தது <ref>[http://en.wikipedia.org/wiki/Vulgate "வுல்காத்தா" என்னும் இலத்தீன் விவிலிய மொழிபெயர்ப்பு] </ref>. இந்த மொழிபெயர்ப்புதான் கத்தோலிக்க திருச்சபையில் நீண்டகாலம் வழக்கத்தில் இருந்துவந்துள்ளது. மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு வேறு மொழிபெயர்ப்புகள் தோன்றலாயின. 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை "வுல்காத்தா" கத்தோலிக்க சபையின் வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிற மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இன்றும் இப்பெயர்ப்பு உள்ளது.
 
 
 
*கி.பி. 410, ஆகத்து 24: உரோமை நகர் சூறையாடப்படுகிறது. அலாரிக் <ref>[http://en.wikipedia.org/wiki/Alaric_I அலாரிக்] </ref>
என்பவர் தலைமையில் விசிகோத்து (Visigoths) என்னும் இனத்தவர் உரோமைமீது படையெடுத்து வந்து, உரோமையின் வடகிழக்கில் அமைந்துள்ள "சலாரியா வாயில்" (Porta Salaria) என்னும் நகர்வாயில் வழி உள்நுழைந்தனர்.
 
 
*கி.பி. 431ஆம் ஆண்டு: முதலாம் எபேசு பொதுச்சங்கம் (First Council of Ephesus) <ref>[http://en.wikipedia.org/wiki/First_Council_of_Ephesus முதலாம் எபேசு பொதுச்சங்கம்] </ref> கூடுகிறது. அச்சங்கம் அறிக்கையிட்ட கோட்பாட்டு முடிவுகள்: இயேசு ஒரே சமயத்தில் கடவுளாகவும் மனிதராகவும் இருக்கிறார்; [[திரித்துவம்|தூய திரித்துவத்தில்]] அவர் தந்தையோடும் தூய ஆவியோடும் கடவுள் நிலையில் அவர்களுக்கு இணையாக உள்ளார். கி.பி. 325இல் நிசேயா நகரில் கூடிய சங்கத்தில் வரையறுக்கப்பட்ட "கிறித்தவ நம்பிக்கைத் திரட்டு" (Nicean Creed) கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடாக விளங்கும் என்று எபேசு சங்கம் அறிவித்தது.
 
 
*கி.பி. 451, அக்டோபர் 8ஆம் நாள்: திருச்சபையின் நான்காம் பொதுச்சங்கமாகிய கால்செதோன் பொதுச்சங்கம் கூடுகிறது.
 
 
*கி.பி. 451, நவம்பர் 1: கால்செதோன் பொதுச்சங்கம் நிறைவுக்கு வருகிறது. கால்செதோன் "கிறித்தவ நம்பிக்கைத் திரட்டு" (Calcedonian Creed) வெளியிடப்படுகிறது. அதன்படி: [[இயேசு கிறித்து]] உண்மையிலேயே கடவுளும் மனிதரும் ஆவார்; தூய கன்னி மரியா "கடவுளின் தாய்" ஆவார். யூட்டிக்கசு (Eutyches) என்பவர் திருச்சபை விலக்கம் செய்யப்படுகிறார் <ref>[http://en.wikipedia.org/wiki/Council_of_Chalcedon கால்செதோன் பொதுச்சங்கம்] </ref>. இது "மரபுவழாக் கீழைச்சபை" (Oriental Orthodoxy) <ref>[http://en.wikipedia.org/wiki/Oriental_Orthodoxy "மரபுவழாக் கீழைச்சபை"]</ref> தோன்ற வழிவகுக்கிறது.
 
 
*கி.பி. 452ஆம் ஆண்டு: ஆட்டிலா என்னும் ஹுன் இனப் போர்வீரர் (Attila the Hun)<ref>[http://en.wikipedia.org/wiki/Attila_the_Hun ஆட்டிலா] </ref> உரோமை நகரைச் சூறையாட வருகிறார். போப்பாண்டவர் முதலாம் லியோ (Pope Leo the Great) ஆட்டிலாவை எதிர்கொண்டு சென்று, உரோமை நகரைச் சூறையாடுவதிலிருந்து தடுக்கிறார் <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Leo_I போப்பாண்டவர் முதலாம் லியோ] </ref>.
 
 
*கி.பி. 455ஆம் ஆண்டு: வாண்டல் இனத்தவர் (Vandals) உரோமை நகரைச் சூறையாடுகிறார்கள் <ref>[http://en.wikipedia.org/wiki/Sack_of_Rome_(455) உரோமை சூறையாடப்படுதல்]</ref>. உரோமைத் தளபதி தீத்து (Titus) <ref>[http://en.wikipedia.org/wiki/Titus தீத்து] </ref> கி.பி. 70இல் எருசலேமைச் சூறையாடி எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொள்ளையடித்த பொருட்களை இப்பொழுது வாண்டல் இனத்தவர் கொள்ளையடித்துத் தம் நகராகிய கார்த்தேஜுக்குக் <ref>[http://en.wikipedia.org/wiki/Carthage கார்த்தேஜு] </ref> கொண்டுசெல்கிறார்கள்.
 
 
*கி.பி. 476, செப்டம்பர் 4: ரோமுலசு அகுஸ்துசு (Romulus Augustus) <ref>[http://en.wikipedia.org/wiki/Romulus_Augustus ரோமுலசு அகுஸ்துசு]</ref> என்னும் உரோமை மன்னர் பதவியிறக்கம் செய்யப்படுகிறார். இதுவே மேற்கத்திய உரோமைப் பேரரசின் வீழ்ச்சியாகப் பல வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. கிறித்தவத் திருச்சபை உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியின்மீது கவனத்தைத் திருப்புகிறது. கான்ஸ்தாந்திநோப்புள் நகரைத் தலைநகராகக் கொண்ட பிசான்சியம் என்று அழைக்கப்படுகின்ற கீழைப் பேரரசுப் பகுதிகளில் கிறித்தவம் விரைவாகப் பரவுகிறது.
 
 
==கி.பி. 477ஆம் ஆண்டு முதல் கி.பி. 799ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்==
[[Image:Meister von San Vitale in Ravenna.jpg|thumb|முதலாம் யுஸ்தீனியன் மன்னன். கற்பதிகை ஓவியம். காலம்: கி.பி. 547க்கு முன். காப்பிடம்: தூய வித்தாலே பசிலிக்கா பெருங்கோவில், ரவேன்னா, இத்தாலியா.]]
 
 
 
*கி.பி. 480ஆம் ஆண்டு: மரபுப்படி, இந்த ஆண்டில் புனித ஆசிர்வாதப்பர் என்று அழைக்கப்படும் பெனதிக்து (St. Benedict) <ref>[http://en.wikipedia.org/wiki/St_Benedict புனித பெனதிக்து] </ref> பிறந்தார். இவர் மேற்கு கிறித்தவ வரலாற்றில் துறவியர் இல்லங்கள் உருவாக அடித்தளம் இட்டார். துறவியர் வாழ்க்கைமுறை <ref>[http://en.wikipedia.org/wiki/Monastic துறவியர் வாழ்க்கைமுறை] </ref> ஒழுங்குகள் வகுத்தார்.
 
 
*கி.பி. 496ஆம் ஆண்டு: ஃபிராங்கு இனத்தவராகிய முதலாம் குளோவிசு மன்னர் (Clovis I) <ref>[http://en.wikipedia.org/wiki/Clovis_I முதலாம் குளோவிசு] </ref> தம் மரபு சமயத்தை விட்டு, கத்தோலிக்க கிறித்தவ சமயத்தைத் தழுவுகிறார்.
 
 
*கி.பி. 502ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பதவிக்கு வாக்களிப்பதில் குருமார் அல்லாத பொதுநிலையினர் பங்கேற்கலாகாது என்றும், உயர்நிலைக் குருமார் மட்டுமே அந்த உரிமை கொண்டவர்கள் என்றும் சிம்மாக்கசு என்னும் போப்பாண்டவர் (Pope Symmachus) <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Symmachus போப்பாண்டவர் சிம்மாக்கசு]</ref> சட்டம் இயற்றுகிறார்.
 
 
*கி.பி. 529ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியன் <ref>[http://en.wikipedia.org/wiki/Justinian_I யுஸ்தீனியன் சட்டத் தொகுப்பு] </ref> தலைமையில் சட்டத் தொகுப்பு உருவாக்கப்படுகிறது. குடிமைச் சட்டத் தொகுப்பின் (Corpus Iuris Civilis) முதல் பகுதி வெளியிடப்படுகிறது. அதுவரை சிதறிக்கிடந்த சட்டங்களை ஒன்றிணைத்துத் திறமையாகத் தொகுத்தது வரலாற்றுச் சிறப்பான நிகழ்வு. அச்சட்டத் தொகுப்பு இன்றைய சட்டத் தொகுப்புகளுக்கு அடிப்படையாக உள்ளது.
 
 
*கி.பி. 533, சனவரி 2: மெர்க்கூரியசு என்பவர் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் (Pope John II) <ref> [http://en.wikipedia.org/wiki/Pope_John_II போப்பாண்டவர் இரண்டாம் ஜான்] </ref> என்னும் பெயரேற்று ஆளத் தொடங்குகிறார். இவரே வரலாற்றில் முதல்முறையாக ஆட்சிப் பெயர் ஏற்ற போப்பாண்டவர் ஆவார். பிசான்சிய மன்னர் யுஸ்தீனியன் போப்பாண்டவருக்குப் பரிசுகள் அளித்ததோடு, கிறித்தவ நம்பிக்கையில் நிலைத்திருப்பதாக உறுதியும் அளிக்கிறார்.
 
 
*கி.பி. 533ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியனின் குடிமைச் சட்டத் தொகுப்பின் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது. மூன்றாம் பகுதி நடைமுறைக்கு வருகிறது.
 
 
*கி.பி. 536ஆம் ஆண்டு: மன்னர் யுஸ்தீனியனுக்குப் படைத் தளபதியாய் இருந்த பெலிசாரியுசு (Belisarius) என்பவர் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை மீண்டும் கைப்பற்ற பெரும் துணை செய்கிறார் <ref>[http://en.wikipedia.org/wiki/Belisarius பெலிசாரியுசு] </ref>. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பிசான்சியத்தின் முதன்மையான தளபதிகளுள் ஒருவர் பெலிசாரியுசு.
 
 
*கி.பி. 553ஆம் ஆண்டு: இரண்டாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் கூடுகிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Second_Ecumenical_Council_of_Constantinople இரண்டாம் கான்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம்] </ref>. இச்சங்கம் அலெக்சாந்திரியா நகர் ஓரிஜன் (Origen of Alexandria)<ref>[http://en.wikipedia.org/wiki/Origen_of_Alexandria அலெக்சாந்திரியா நகர் ஓரிஜன்] </ref> என்னும் கிறித்தவ அறிஞரின் தவறான போதனைகளைக் கண்டனம் செய்கிறது. இதுவரை நடந்த நான்கு பொதுச்சங்கங்களின் போதனையை (நிசேயா [325]; முதலாம் கான்ஸ்தாந்திநோப்புள் [381]; எபேசு [431]; கால்செதோன் [451]) இச்சங்கம் உறுதிப்படுத்தியது.
 
 
*கி.பி. 590ஆம் ஆண்டு: போப்பாண்டவர் முதலாம் (பெரிய) கிரகோரி (Pope Gregory the Great) <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Gregory_I போப்பாண்டவர் முதலாம் கிரகோரி] </ref> பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திருச்சபை அமைப்பு, நடைமுறை ஆகிவற்றில் சீர்திருத்தம் கொணர்கிறார். கிரகோரிய இசை (Gregorian Chant) <ref>[http://en.wikipedia.org/wiki/Gregorian_Chant கிரகோரிய இசை] </ref> என்னும் இராக முறை இசையைப் பரவலாக்குகிறார்.
 
 
*கி.பி. 596ஆம் ஆண்டு: போப்பாண்டவர் பெரிய கிரகோரி இங்கிலாந்து நாட்டில் கிறித்தவ மறையைப் பரப்புவதற்காகக் கண்டர்பரி அகுஸ்தீன் <ref>[http://en.wikipedia.org/wiki/Augustine_of_Canterbury புனித கண்டர்பரி அகுஸ்தீன்]</ref> என்னும் பெனதிக்து சபைத் துறவியை அனுப்புகிறார். அவரோடு சில துறவியர் உட்பட இன்னும் 40 பேர் செல்கிறார்கள்.
 
 
*கி.பி. 638ஆம் ஆண்டு: இசுலாமியர் <ref>[http://en.wikipedia.org/wiki/Muslims இசுலாமியர்] </ref> கிறித்தவ எருசலேம் நகரையும் சிரியாவையும் கைப்பற்றுகிறார்கள்.
 
 
*கி.பி. 642ஆம் ஆண்டு: எகிப்து இசுலாமியர் கைவசம் ஆகிறது. தொடர்ந்து அவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் பரவுகிறார்கள்.
 
 
*கி.பி. 664ஆம் ஆண்டு: இங்கிலாந்திலுள்ள கெல்ட்டிக் திருச்சபை <ref>[http://en.wikipedia.org/wiki/Celtic_Christianity கெல்ட்டிக் திருச்சபை]</ref> கத்தோலிக்க சபையோடு இணைய விட்பி மன்றம் வழிவகுக்கிறது.
 
 
*கி.பி. 680ஆம் ஆண்டு: [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவிடம்]] இறை உளம் உண்டே ஒழிய மனித உளம் இல்லை<ref>[http://en.wikipedia.org/wiki/Monothelitism இயேசுவின் மனித இயல்பு]</ref> என்னும் தவறான கொள்கையை 3ஆம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச் சங்கம் கண்டிக்கிறது.
 
 
*கி.பி. 685ஆம் ஆண்டு: மரோனித்தர்<ref>[http://en.wikipedia.org/wiki/Maronites மரோனித்தர் சபை]</ref> என்று அழைக்கப்படும் குழுவிலிருந்து யோவான் மரோன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தியோக்கியா நகருக்கும் கீழ்த்திசை சபைகள் அனைத்திற்கும் முதுபெரும் தந்தையாக நியமிக்கப்படுகிறார். அவர் முதலாம் செர்ஜியுசு என்னும் போப்பாண்டரின் ஒப்புதலைப் பெறுகிறார்.
 
 
*கி.பி. 698ஆம் ஆண்டு: முதலாம் செர்ஜியுசு என்னும் போப்பாண்டவர் வில்லிபுரோர்து<ref>[http://en.wikipedia.org/wiki/Willibrord வில்லிப்ரோர்து]</ref> என்பவரை ஓலாந்து நாட்டு ஃபிரிசியர்களுக்கு ஆயராக நியமிக்கிறார். வில்லிபுரோர்து உட்ரெக்ட் நகரில் ஒரு கோவில் எழுப்புகிறார்.
 
 
*கி.பி. 711ஆம் ஆண்டு: இசுலாமியப் போர்ப்படைகள் எசுப்பானியா நாட்டின் மீது தாக்குதல் நிகழ்த்துகிறார்கள்<ref>[http://en.wikipedia.org/wiki/Muslim_invasion_of_Spain இசுலாமியர் தாக்குதல்]</ref>.
 
 
*கி.பி. 718ஆம் ஆண்டு: இங்கிலாந்து நாட்டவரான புனித போனிஃபாசு<ref>[http://en.wikipedia.org/wiki/St._Boniface புனித போனிஃபாசு]</ref> என்பவரை இரண்டாம் கிரகரி என்னும் போப்பாண்டவர் செருமனிக்கு அனுப்பி, அங்குக் கிறித்தவ மதம் பரவிட வழிவகுக்கிறார்.
 
*கி.பி. 726ஆம் ஆண்டு: உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில் கிறித்தவப் புனிதர்களின் உருவச் சின்னங்களை அழிக்கும் செயல் தொடங்குகிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Iconoclasm உருவச் சின்னம் உடைப்பு]</ref>. இது கி.பி. 843 வரை நிகழ்கிறது.
 
 
*கி.பி. 732ஆம் ஆண்டு: இசுலாமியர் மேற்கு ஐரோப்பாவின்மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்துகிறார்கள். சார்லஸ் மர்த்தேல் என்னும் அரசன் இசுலாமிய ஆக்கிரமிப்பைப் ஃபிரான்சு நாட்டுப் புவாத்தியே நகர் அருகே தடுத்துநிறுத்துகிறார் <ref>[http://en.wikipedia.org/wiki/Charles_Martel சார்லஸ் மர்த்தேல்]</ref>.
 
 
*கி.பி. 751ஆம் ஆண்டு: பிசான்சிய பேரரசின் வெளி ஆட்சித் தளமாகிய ரவேன்னா நகரை லொம்பார்தியர் கைப்பற்றுகிறார்கள். இதனால் மத்திய இத்தாலியாவிலும் உரோமையிலும் பிசான்சியத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
 
 
*கி.பி. 756ஆம் ஆண்டு: போப்பாண்டவரை நாட்டுத் தலைவராகக் கொண்டு ஆளப்படுகின்ற '''போப்பாண்டவர் நாடு''' (Papal States) <ref>[http://en.wikipedia.org/wiki/Papal_States போப்பாண்டவர் நாடு]</ref> உருவாகத் தொடங்குகிறது.
 
 
*கி.பி. 787ஆம் ஆண்டு: '''பெப்பினின் கொடை''' <ref>[http://en.wikipedia.org/wiki/Papal_States ''பெப்பினின் கொடை'']</ref> என்னுன் செயல்பாடு வழியாக ஃபிராங்கு இனத் தலைவன் பெப்பின் போப்பாண்டவர்கள் தன்னாட்சி உரிமையோடு ஆளலாம் என்னும் சலுகையை அளிக்கின்றான்.
 
 
*கி.பி. 787ஆம் ஆண்டு: கிறித்தவ சமய உண்மைகளையும் புனிதர்களையும் ஓவியம், சிலை, படிம உருவம் ஆகிய ஊடகங்களில் சித்தரித்து மக்கள் வணக்கம் செலுத்துவது தவறல்ல எனவும், கடவுளுக்கு மட்டுமே முழுமுதல் ஆராதனை செலுத்தப்படுகிறது, சிலைகளுக்கு ஆராதனை வழங்கப்படுவதில்லை எனவும் இரண்டாம் நீசேயா பொதுச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றிகிறது.
 
 
*கி.பி. 793ஆம் ஆண்டு: விக்கிங்கி இனத்தார் கிறித்தவ ஐரோப்பாவைத் தாக்கத் தொடங்குகின்றனர். இங்கிலாந்துக்கு அருகிலுள்ள லிண்டிஸ்ஃபார்னே<ref>[http://en.wikipedia.org/wiki/Lindisfarne லிண்டிஸ்ஃபார்னே துறவியர் இல்லம்]</ref> தீவில் அமைந்த முக்கிய துறவியர் இல்லத்தை அழிக்கின்றனர்.