ஜுப்பிடர் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox military conflict |conflict=ஜுப்பிடர் நடவடிக்கை |partof=கான் சண்டையின் பகுதி...
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
'''ஜுப்பிடர் நடவடிக்கை''' (''Operation Jupiter'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு சண்டை. இது [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாகும். [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பில் இருந்த [[பிரான்சு|பிரான்சின்]] [[கான்]] நகரைத் கைப்பற்ற [[நேச நாடுகள்|நேச நாட்டுப் படைகள்]] மேற்கொண்ட [[கான் சண்டை|முயற்சியின்]] ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.
 
பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. [[சார்ண்வுட் நடவடிக்கை]]யின் மூலம் கான் நகரின் வடக்கு பகுதிகள் கைப்பற்றப்பட்டன. பிற பகுதிகளைக் கைப்பற்ற தாகுதல்கள்தாக்குதல்கள் தொடர்ந்தன. கான் நகரின் மேற்கில் உள்ள சில கிராமங்களையும் 112ம் குன்றையும் கைப்பற்ற ஜூப்பிட்டர் நடவடிக்கை ஜூலை 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
 
நார்மாண்டிப் பகுதியிலிருந்த பல ஜெர்மானிய கவச [[டிவிசன்]]களை கான் நகருக்கான சண்டையில் முடக்க நேச நாட்டு உத்தியாளர்கள் விரும்பினர். நார்மாண்டியின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பிரான்சு நாட்டின் உட்பகுதிக்கு முன்னேற அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறு முன்னேறும் போது நார்மாண்டியில் உள்ள ஜெர்மானியக் கவச டிவிசன்கள் எதிர்க்க வாய்ப்பில்லாமல் அவற்றை கான் நகரருகே முடக்குவது அவர்களது திட்டம். கான் நகரின் மேற்கிலிருந்த 112ம் குன்றைக் கைப்பற்றுவதன் மூலம், ஜெர்மானியர்களின் கவனத்தையும் படைப்பிரிவுகளையும் கான் நகரில் நிலைத்து நிற்கச் செய்ய முடியுமென்று அவர்கள் நம்பினர். ஏற்கனவே ஒரு முறை [[எப்சம் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாக 112ம் குன்று கைப்பற்றப்பட்டிருந்தது. ஆனால் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களால் பிரிட்டானியப் படைகள் கைப்பற்றிய குன்றிலிருந்து பின்வாங்கி விட்டன.
"https://ta.wikipedia.org/wiki/ஜுப்பிடர்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது