மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
===நார்வே மற்றும் டென்மார்க்===
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்===
{{see also|பிரான்சு சண்டை|பெல்ஜியம் சண்டை|நெதர்லாந்து சண்டை|லக்சம்பர்க் படையெடுப்பு}}
மே 10, 1940ல் போலிப் போர் முடிவடைந்து ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய [[மேல்நிலை உத்தி]] ”மஞ்சள் திட்டம்” ([[ஜெர்மன்]]:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியத்தின்]] மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் [[ஆர்டென் காடு]]கள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. பெல்ஜியத்தைத் தாக்குவதோடு [[லக்சம்பர்க் படையெடுப்பு|லக்சம்பர்க்]] மற்றும் [[நெதர்லாந்து சண்டை|நெதர்லாந்தையும்]] ஜெர்மானியப் படைகள் தாக்கின. பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க்கை தரைப்படைத் தாக்குதல் மூலம் கைப்பற்றினாலும், நெதர்லாந்தைத் தாக்க [[வான்குடை]] வீரரகளை பெருமளவில் ஜெர்மானியத் தளபதிகள் பயன்படுத்தினர். தாக்குதல் தொடங்கிய அன்றே லக்சம்பர்க் முழுவதும் ஜெர்மானிய வசமானது. அடுத்து மே 14ம் தேதி டச்சு அரசாங்கமும் 28ம் தேதி பெல்ஜிய அரசும் சரணடைந்தன.