"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

==ஜெர்மனி மீதான படையெடுப்பு==
{{main|மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு}}
[[படிமம்:Reemagen enclosure.jpg|left|thumb|250px|ரூர் இடைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான ஜெர்மானிய [[போர்க்கைதி]]கள்]]
பல்ஜ் தாக்குதலை முறியடித்த நேச நாட்டுப் படைகள் அடுத்து பெப்ரவரி 1945ல் ஜெர்மனி மீது படையெடுத்தன. ஐசனாவர் ஜெர்மனியின் மேற்கெல்லையில் ஒரு பரந்த முனையெங்கும் தாக்கத் திட்டமிட்டார். மேற்கு களம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - 1) வடக்கில் [[வட கடல்|வட கடலிலிருந்து]] [[கோல்ன்]] நகர் வரையான எல்லை மோண்ட்கோமரியின் 21வது [[ஆர்மி குரூப் (படைப்பிரிவு)|ஆர்மி குரூப்]]பின் பொறுப்பு 2) மத்தியில் [[மெயின்ஸ்]] நகரம் வரை [[லெப்டினன்ட் ஜெனரல்]] [[ஒமார் பிராட்லி]]யின் 12வது அமெரிக்க ஆர்மி குரூப்பின் பொறுப்பு 3) தெற்கில் [[சுவிட்சர்லாந்து]] எல்லை வரை லெப்டினன்ட் ஜெனரல் ஜேகப் டெவர்சின் 6வது ஆர்மி குரூப்பின் பொறுப்பு.
 
பெப்ரவரி மாதம் வடக்கில் [[வெரிடபிள் நடவடிக்கை|வெரிடபிள்]] மற்றும் [[கிரெனேட் நடவடிக்கை|கிரெனேட்]] நடவடிக்கைகள் மூலம் [[மியூசே ஆறு|மியூசே ஆற்றுக்கும்]] [[ரைன் ஆறு|ரைன் ஆற்றுக்கும்]] இடைப்பட்ட பகுதி கைப்பற்றப்பட்டது. மார்ச் மாதம் வடக்கிலும் மத்தியிலும், ரைன் ஆற்றைக் கடக்க சண்டைகள் நடந்தன. வடக்கில் [[பிளண்டர் நடவடிக்கை]] மூலம் ரைன் ஆறு கடக்கப் பட்டது. மத்திய முனையில் பிராட்லியின் படைகள் எளிதாக ரெமகன் என்ற இடத்தில் ஆற்றைக் கடந்து விட்டன. ஆற்றைக் கடந்த பின்னர் இந்த இரு பெரும் படைப்பிரிவுகளில் ஒரு பாதி ரூர் பகுதியைச் சுற்றி வளைக்கவும், மற்றொரு பாதி ஜெர்மனியின் உட்பகுதியைத் தாக்கவும் விரைந்தன. ஏப்ரல் 1ம் தேதி [[ரூர் இடைப்பகுதி]]யிலிருந்த ஜெர்மானியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. அடுத்த இருபது நாட்களுள் அப்பகுதி கைப்பற்றப்பட்டு சுமார் மூன்று லட்சம் ஜெர்மானியப் படை வீரர்கள் கைப்பற்றப்பட்டனர். மார்ச் 26ம் தேதி தெற்கு முனையிலும் 6வது ஆர்மி குரூப் ரைனைக் கடந்து [[ஆஸ்திரியா]] நோக்கி விரைந்தது.
[[படிமம்:Bundesarchiv Bild 183-1985-0531-314, Torgau, Begegnung amerikanische-sowjetische Soldaten.jpg|right|thumb|225px|ஏப்ரல் 29, 1945ல் கை கோர்க்கும் சோவியத், அமெரிக்கப் படைகள்]]
ரூர் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே, 12வது ஆர்மி குரூப்பின் ஒரு பிரிவு ஜெர்மனியின் மையப்பகுதியை நோக்கி முன்னேறியது. முதலில் ஜெர்மனியின் தலைநகர் [[பெர்லின்|பெர்லினை]]க் கைப்பற்ற வேண்டுமென்று திட்டமிட்டிருந்த ஐசனாவர் மார்ச் மாத இறுதியில் தன் இலக்கை மாற்றினார். பெர்லினை மேற்கத்தியப் படைகள் அடைவதற்கு முன்னர் [[சோவியத் யூனியன்|சோவியத்]] படைகள் கிழக்கிலிருந்து கைப்பற்றி விடுமென்பதால் பெர்லினை நோக்கி முன்னேறாமல், லெய்ப்சிக் நகரைக் கைப்பற்றுவது ஐசனாவரின் இலக்கானது. ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றின்]] கரையில் அமைந்திருந்த லெய்ப்சிக் நகரை நோக்கி 12வது ஆர்மி குரூப் முன்னேறியது. ஏப்ரல் 25ம் தேதி கிழக்கிலிருந்து முன்னேறிக் கொண்டிருந்த சோவியத் படைகளும் மேற்கிலிருந்து விரைந்து கொண்டிருந்த அமெரிக்கப்படைகளும் எல்பா ஆற்றருகே கை கோர்த்தன. எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகள் இதனால் இரண்டாகத் துண்டிக்கப்பட்டன. ஏப்ரல் 29ம் தேதி 21வது ஆர்மி குரூப் எல்பா ஆற்றைக் கடந்தது.
 
==1945: போரின் முடிவு==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/685456" இருந்து மீள்விக்கப்பட்டது