"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

{{main|பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்}}
 
====கால்வாய்க் கடற்கரை====
பாரிசு வீழ்ந்த பின்னர், அடுத்து பிரான்சின் பிற பகுதிகளை விடுவித்து ஜெர்மனியின் எல்லைக்கு முன்னேற நெச நாட்டுப் படைகள் திட்டமிட்டன. இது பல கட்டங்களாக நடந்தேறியது. இதில் ஒரு பகுதி [[கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல்]].
கனடிய 1வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]க்கு [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயோரமாக]] இருந்த துறைமுகங்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்துறைமுகங்கள் பிரான்சில் தரையிறங்கியிருந்த நேசநாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்யத் தேவைப்பட்டன. இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய பீரங்கிக் குழுமங்கள் கால்வாயில் செல்லும் நேசநாட்டுக் கப்பல்களையும், [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[டோவர்]] துறைமுகத்தையும் தாக்கி வந்தன. மேலும் இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய [[வி-1]] எறிகணைத் தளங்கள் இங்கிலாந்து நகரங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி வந்தன. இக்காரணங்களால் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது அவசியமானது. ஆகஸ்ட் 23ம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது. துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் எதிர்க்காமல் பின்வாங்கின. கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என ஹிட்லர் அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். இதனால் [[லே ஆவர்]], [[போலோன்]], [[கலே]], [[டன்கிர்க்]] போன்ற துறைமுகங்களில் இரு தரப்புக்கும் சண்டைகள் நடந்தன. இவற்றுள் டன்கிர்க் தவிர பிற துறைமுகங்களை கனடியப் படைகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் கைப்பற்றிவிட்டன.
 
====ஷெல்ட் முகத்துவாரம்====
[[படிமம்:Acrossthescheldt.jpg|right|thumb|250px|ஷெல்ட் ஆற்றைக் கடைக்கும் கனடிய நீர்நில வண்டிகள்]]
ஆங்கிலக் கால்வாய் கடற்கரைத் துறைமுகங்களைக் கைப்பற்றிய பின்னரும், நேசநாட்டுத் தளவாடப் பற்றாக்குறை சரியாகவில்லை. இதனால் [[பெல்ஜியம்]] நாட்டின் [[ஆண்ட்வெர்ப்]] துறைமுகத்தைச் சரக்குப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவது அவசியமானது. ஆண்ட்வெர்ப் துறைமுகம் கைப்பற்றப்பட்டிருந்தாலும் அதனை சுற்றியிருந்த [[ஷெல்ட் ஆறு|ஷெல்ட் முகத்துவார]]ப் பகுதி ஜெர்மானிய 15வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]யின் வசமிருந்தது. இதனால் அக்டோபர் 2, 1944ல் கனடியப் படைகள் ஷெல்ட் பகுதியைக் [[ஷெல்ட் சண்டை|கைப்பற்றும் முயற்சியில்]] இறங்கின. அடுத்த ஐந்து வாரங்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. நீர்நிலத் தாக்குதல்கள், கடும் ஜெர்மானிய எதிர்ப்பு, சீரற்ற நிலப்பரப்பில் முன்னேற்றம் என பல கடினமான தடைகளை முறியடித்து நவம்பர் 8ம் தேதி ஷெல்ட் முகத்துவாரப்பகுதியை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. ஷெல்ட் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு மூன்று வாரங்களுள் ஆண்ட்வெர்ப் துறைமுகம் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது. இதனால் நேசநாட்டு தளவாடப் பற்றாக்குறை பெருமளவு குறைந்தது.
 
====மார்க்கெட் கார்டன்====
பிரான்சு முழுவதும் மீட்கப்பட்ட பின்னர் ஜெர்மனியை நேரடியாகத் தாக்க நேச நாட்டுப் படைகள் திட்டமிட்டன. பிரான்சிலிருந்த் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பின்வாங்கி விட்டன. ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான எல்லைப்பகுதியை அவை மிகவும் பலப்படுத்தியிருந்தன. [[சிக்ஃப்ரைட் கோடு]] என்றழைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அரணை நேரடியாகத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும் என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்திருந்தனர். இதனால் [[மார்க்கெட் கார்டன் நடவடிக்கை]] மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் நோக்கம், மேற்குத் திசையில் சுற்றி சிக்ஃபிரைட் கோட்டைத் தவிர்த்து [[நெதர்லாந்து]] நாட்டின் வழியாக ஜெர்மனியை நேரடியாகத் தாக்குவதே. இதற்கு [[ரைன் ஆறு|ரைன்]] மற்றும் [[மியூஸ் ஆறு|மியூஸ்]] ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற வேண்டும். பாலங்களைக் கைப்பற்றி விட்டால், பின்னர் அவற்றைப் பயன்படுத்தி ஜெர்மனியின் மையத் தொழில்பகுதியான [[ரூர்]] பிரதேசத்தைத் தாக்க படைகளை நகர்த்தலாம் என்பது திட்டம். இத்திட்டம் வெற்றிபெற இதற்கு [[ரைன் ஆறு|ரைன்]] மற்றும் [[மியூஸ் ஆறு|மியூஸ்]] ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற நேசநாட்டுப் படைகள் முயன்றன.
 
மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் இரு பெரும் உட்பிரிவுகள் இருந்தன. ”மார்க்கெட் நடவடிக்கை”யின் நோக்கம் வான்குடை வீரர்களைக் கொண்டு ஜெர்மனி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாலங்களைக் கைப்பற்றுவது. “கார்டன் நடவடிக்கை”யின் நோக்கம் கவசப் படைகளைக் கொண்டு ஜெர்மனி பாதுகாப்பு கோட்டை உடைத்து வான்குடை வீரர்கள் கைப்பற்றியிள்ள பாலங்களைச் சென்றடைவது. இத்தாக்குதல் செப்டம்பர் 17-25 காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. தாக்குதல் பகுதியில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானிய [[எஸ். எஸ்]] படைப்பிரிவுகள், பாலங்களைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட தாமதம், ஜெர்மானிய எதிர்தாக்குதல் போன்ற காரணங்களால் மார்க்கெட் கார்டன் வெற்றி பெறவில்லை. கைப்பற்ற வேண்டிய நான்கு முக்கிய பாலங்களில் மூன்றினை நேச நாட்டு [[வான்குடை]] வீரர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் நானகாவது [[ஆர்னெம் சண்டை|ஆர்னெம்]] பாலத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முயன்ற பிரிட்டானிய 1வது வான்குடை [[டிவிசன்]] ஜெர்மானிய எதிர்த்தாக்குதலால் அழிக்கப்பட்டு விட்டது. மார்க்கெட் கார்டனின் தோல்வியால் சிக்ஃபிரைட் கோட்டை நேரடியாகத் தாக்குவது தவிர்க்க முடியாமல் போனது.
 
====ஆஃகன் மற்றும் ஊர்ட்கென் காடு====
[[படிமம்:GI machine gun crew in Aachen (Correct orientation).jpg|right|thumb|250px|ஆஃகன் நகரத்தில் அமெரிக்க எந்திரத் துப்பாக்கி வீரர்கள்]]
சிக்ஃபிரைட் கோட்டினை அணுகுவதற்கு முன்னர் [[ஆஃகன்]] நகரை நேச நாட்டுப் படைகள் கைப்பற்ற வேண்டியிருந்தது. அக்டோபர் 2, 1944ல் அமெரிக்க 1வது ஆர்மி ஆஃகன் நகர் மீதான [[[ஆஃகன் சண்டை|தாக்குதலைத்]] தொடங்கியது. அமெரிக்க 30வது டிவிசன் அக்டோபர் 2ம் தேதி வடதிசையிலிருந்து ஆஹன் நகரைத் தாக்கியது. ஐந்து நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னரே இரு படைப்பிரிவுகளும் கை கோர்த்தன. இச்சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்க பீரங்கிகள் ஆஹன் நகரின் மீது தொடர்ந்து குண்டு வீசின. அக்டோபர் 16ம் தேதி இரு அமெரிக்க டிவிசன்களும் சேர்ந்து நகருக்குள் முன்னேறத் தொடங்கின. அக்டோபர் 16-21ல் ஆஹன நகரத் தெருக்களில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. நகரெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள், வீடுகளின் நிலவறைகள், பதுங்குகுழிகள், பாதாளச் சாக்கடைகள் போன்றவற்றிலிருந்து தாக்கும் ஜெர்மானியப் படைகளை சமாளித்து அமெரிக்கப் படைகள் மெல்ல நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறின. கடும் சண்டைக்குப்பின் 21ம் தேதி ஜெர்மானியத் தளபதி மில்க் ஆஹன் நகர் சரணடைவதாக அறிவித்தார். இச்சண்டையில் இரு தரப்பிலும் தலா 5,000 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 5,000 ஜெர்மானியப் படைவீரர்கள் [[போர்க்கைதி|கைது செய்யப்பட்டனர்]]. ஆஹன் நகர் அமெரிக்கர் வசமானாலும், நேசநாட்டுப் படைகளின் இழப்புகளால் ஜெர்மனியின் உட்பகுதியுள் நேசநாட்டு முன்னேற்றம் தடைபட்டது.
 
[[படிமம்:Bundesarchiv Bild 183-J28303, Hürtgenwald, schweres Infanteriegeschütz.jpg|right|thumb|250px|ஊர்ட்கென் காட்டில் ஜெர்மானிய பீரங்கி]]
ஆஃகன் சண்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகளை பக்கவாட்டிலிருந்து ஜெர்மானியப் படைகள் தாக்காமல் காக்க, அமெரிக்கத் தளபதிகள் ஊர்ட்கென் காட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஊர்ட்கென் காட்டுப்பகுதி ஜெர்மானியர்களின் எதிர்கால உத்திக்கு மிக அவசியமானதாக இருந்தது. அவர்கள் அடுத்து நிகழ்த்த திட்டமிட்டிருந்த பல்ஜ் சண்டைக்கு இப்பகுதியே படைகளை ஒழுங்கமைக்கும் பகுதியாகத் (staging area) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. மேலும் [[ருர் ஏரி]]யின் முகப்புப் பகுதியிலுள்ள ஷ்வாம்மானுவேல் அணைக்கட்டுக்குச் செல்லும் சாலைகள் ஊர்ட்கென் வழியாகச் சென்றன. அந்த அணைக்கட்டைத் திறந்து விட்டால் ருர் ஆற்றில் வெள்ளம் பாயச்செய்து ஆற்றைக் கடப்பதைத் தடுக்க முடியும். இவ்விரு காரணங்களால் ஊர்ட்கென் பகுதி ஜெர்மானியருக்கு அதிமுக்கியமானதாக இருந்தது. செப்டம்பர் 1944ல் அமெரிக்கப் படைகள் [[ஊர்ட்கென் காடு சண்டை|ஊர்ட்கன் காட்டைத் தாக்கின]]. ஜெர்மானியர்களின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் சண்டையில் யாருக்கும் வெற்றியில்லாமல் இழுபறி நிலை ஏற்ப்ட்டது. [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டின்]] அரண்நிலைகளைப் பயன்படுத்தி ஜெர்மானியர்கள் அமெரிக்கப்படைகளுக்குப் பெரும் இழப்புகளை விளைவித்தனர். இச்சண்டையில் 33,000 அமெரிக்கர்களும் 28,000 ஜெர்மானியரும் மாண்டனர். ஆஃகன் சண்டையில் வெற்றி கிட்டினாலும், ரூர் ஆற்றைக் கடக்கும் அமெரிக்க முயற்சி தோல்வியடைந்தது. டிசம்பர் 17ம் தேதி பல்ஜ் சண்டை தொடங்கியதால் இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. அச்சண்டை முடிவு பெறும்வரை (பெப்ரவரி 1945) வரை ஊர்ட்கென் காடு அமெரிக்கர் வசமாகவில்லை
 
===ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்===
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/685466" இருந்து மீள்விக்கப்பட்டது