"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
====கால்வாய்க் கடற்கரை====
[[File:Le Havre Assault.jpg|right|thumb|250px|[[லே ஆவர்]] மீதான தாக்குதல்]]
பாரிசு வீழ்ந்த பின்னர், அடுத்து பிரான்சின் பிற பகுதிகளை விடுவித்து ஜெர்மனியின் எல்லைக்கு முன்னேற நெச நாட்டுப் படைகள் திட்டமிட்டன. இது பல கட்டங்களாக நடந்தேறியது. இதில் ஒரு பகுதி [[கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல்]].
கனடிய 1வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]க்கு [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயோரமாக]] இருந்த துறைமுகங்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்துறைமுகங்கள் பிரான்சில் தரையிறங்கியிருந்த நேசநாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்யத் தேவைப்பட்டன. இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய பீரங்கிக் குழுமங்கள் கால்வாயில் செல்லும் நேசநாட்டுக் கப்பல்களையும், [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[டோவர்]] துறைமுகத்தையும் தாக்கி வந்தன. மேலும் இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய [[வி-1]] எறிகணைத் தளங்கள் இங்கிலாந்து நகரங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி வந்தன. இக்காரணங்களால் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது அவசியமானது. ஆகஸ்ட் 23ம் தேதி இந்த நடவடிக்கை தொடங்கியது. துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் எதிர்க்காமல் பின்வாங்கின. கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என ஹிட்லர் அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். இதனால் [[லே ஆவர்]], [[போலோன்]], [[கலே]], [[டன்கிர்க்]] போன்ற துறைமுகங்களில் இரு தரப்புக்கும் சண்டைகள் நடந்தன. இவற்றுள் டன்கிர்க் தவிர பிற துறைமுகங்களை கனடியப் படைகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் கைப்பற்றிவிட்டன.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/685468" இருந்து மீள்விக்கப்பட்டது