மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
===ஓவர்லார்ட் ===
{{main|ஓவர்லார்ட் நடவடிக்கை}}
 
நான்கு ஆண்டுகளாக நாசி ஜெர்மனியின் பிடியிலிருந்த [[மேற்கு ஐரோப்பா]]வை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது [[நார்மாண்டி படையெடுப்பு|படையெடுக்கத் திட்டமிட்டன]]. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் [[அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]] போன்ற நேச நாடுகளின் படைகளுடன், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட [[பிரான்சு]], [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]], [[நார்வே]], [[போலந்து]], [[லக்சம்பர்க்]], [[செக்கஸ்லோவாக்கியா]] போன்ற நாடுகளின் நாடு கடந்த அரசுப் படைகளும் (விடுதலைப் படைகள்) கலந்து கொண்டன. படையெடுப்பு நிகழும் இடம், நேரம் ஆகியவற்றை ஜெர்மானியர்கள் கணிக்காமல் இருக்க பல [[ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை|திசை திருப்பும் நடவடிக்கைகளும்]] மேற்கொள்ளப்பட்டன. ஜெர்மானியப் போர்த் தலைமையகத்துள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், உத்தி முடிவுகளில் [[இட்லர்|இட்லரின்]] தலையீட்டாலும் ஜெர்மானியர்களால் படையெடுப்பைத் தடுக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.
 
ஜூல் 6, 1944ல் இப்படையெடுப்பு [[நார்மாண்டி தரையிறக்கம்|தொடங்கியது]]. ஒன்றரை மாத கால கடும் சண்டைக்குப் பின்னர் நார்மாண்டி கடற்கரை முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமாகின. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. ஆனால் பிரிட்டானிய/கனடிய இலக்குப் பகுதியான [[கான்]] நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் கடுமையான [[கான் சண்டை|சண்டை]] நிகழ்ந்தது. ஜூலை இறுதியில் அமெரிக்கப்படைகள் நார்மாண்டியைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதியை நோக்கி [[கோப்ரா நடவடிக்கை|முன்னேறத் தொடங்கின]]. இதனைத் தடுக்க ஜெர்மானியர்கள் மேற்கொண்ட [[லியூட்டிக் நடவடிக்கை|எதிர்த்தாக்குதல்கள்]] தோல்வியடைந்தன. [[செய்ன் ஆறு|செய்ன் ஆற்றுக்கு]] மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பகுதி [[ஃபலேசு இடைப்பகுதி]]யில் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டது. ஆகஸ்ட் 25ல் பிரான்சுத் தலைநகர் [[பாரிசின் விடுவிப்பு|பாரிசு விடுவிக்கப்பட்டது]]. மேற்கு பிரான்சில் எஞ்சிய ஜெர்மானியப் படைகள் செய்ன் ஆற்றைக் கடந்து பின்வாங்கின.
 
===பாரிசிலிருந்து ரைன் வரை===