"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

===ஓவர்லார்ட் ===
{{main|ஓவர்லார்ட் நடவடிக்கை}}
[[படிமம்:NormandySupply edit.jpg|right|thumb|250px| [[ஒமாகா கடற்கரை]]யில் தரையிறங்கும் நேச நாட்டுப் படைகள்]]
 
நான்கு ஆண்டுகளாக நாசி ஜெர்மனியின் பிடியிலிருந்த [[மேற்கு ஐரோப்பா]]வை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது [[நார்மாண்டி படையெடுப்பு|படையெடுக்கத் திட்டமிட்டன]]. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் [[அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]] போன்ற நேச நாடுகளின் படைகளுடன், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட [[பிரான்சு]], [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]], [[நார்வே]], [[போலந்து]], [[லக்சம்பர்க்]], [[செக்கஸ்லோவாக்கியா]] போன்ற நாடுகளின் நாடு கடந்த அரசுப் படைகளும் (விடுதலைப் படைகள்) கலந்து கொண்டன. படையெடுப்பு நிகழும் இடம், நேரம் ஆகியவற்றை ஜெர்மானியர்கள் கணிக்காமல் இருக்க பல [[ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை|திசை திருப்பும் நடவடிக்கைகளும்]] மேற்கொள்ளப்பட்டன. ஜெர்மானியப் போர்த் தலைமையகத்துள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், உத்தி முடிவுகளில் [[இட்லர்|இட்லரின்]] தலையீட்டாலும் ஜெர்மானியர்களால் படையெடுப்பைத் தடுக்க சரியான முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.
 
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/685908" இருந்து மீள்விக்கப்பட்டது