கோடை பாடிய பெரும்பூதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கோடை பாடிய பெரும்பூதனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர்....
 
No edit summary
வரிசை 1:
கோடை பாடிய பெரும்பூதனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது. அது புறநானூற்றில் 259ஆம் பாடலாக உள்ளது.
==புலவர் பெயரில் உள்ள அடைமொழிக்கான விளக்கம்==
:இப்பாடலில் கோடைக்காலம் புதுமையான கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டுள்ளதால் இப் புலவருக்குக் 'கோடை பாடிய' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது.
===கோடை காலத்தைப் புதுமையாகப் பார்த்தல்===
:கோடைகாலம் வந்ததும் விலங்கினம் தன் ஏறு(ஆண்விலங்கு) உடன் வரும் கூட்டத்தோடு வேறு நிலத்துக்குச் சென்றுவிடும். அப்போதும் வல்வில் மறவன் இலைகள் புதைந்து கிடக்கும் அந்தக் காட்டிலிருந்து போகமாட்டானாம். இலை மறைவில் தன் தலையைப் புதைத்துக்கொண்டு இருந்து மானை வேட்டையாடுவானாம். - இதுதான் அந்தப் புதிய பார்வை.
* திணை - கரந்தை
* துறை - செரு மலைதல், பிள்ளைப் பெயர்ச்சி
"https://ta.wikipedia.org/wiki/கோடை_பாடிய_பெரும்பூதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது