பொலன்னறுவை இந்துக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:polsiva.jpg|thumb|300px|பொலன்னறுவையிலுள்ள சோழர்களால் கட்டப்பட்ட சிவனாலயத்தின் சிதைவுகள்]]
 
[[இலங்கை]]யின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று [[பொலன்னறுவை]]. [[சோழர்]]களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில், அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காகக் கட்டப்பட்டனவே '''பொலன்னறுவை இந்துக் கோயில்கள்'''. இங்கே பத்துச் [[சிவன் கோயில்]]களும், ஐந்து [[விஷ்ணு கோயில்]]களும், ஒரு [[காளி]] கோயிலுமாகப் பதினாறு [[இந்துக் கோயில்]]கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை. ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை. பாண்டியர் காலத்திலும், கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. [[கலிங்க மாகன்|கலிங்க மாகனின்]] காலத்திலும் இவற்றுட் சில கட்டப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
 
==வரலாற்றுப் பின்னணி==
வரிசை 7:
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இலங்கை மீது படையெடுத்த [[இராஜராஜ சோழன்]] அந்நாட்டின் தலைநகரமாக இருந்த [[அனுராதபுரம்|அனுராதபுரத்தைக்]] கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வடபகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது. போரில் அழிந்துபோன அனுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை [[தலைநகரம்]] ஆக்கப்பட்டது. 1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான [[இராஜேந்திர சோழன்]] மீண்டும் இலங்கைமீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.
 
சோழர் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பதாலும், சிங்களவர்களுக்கும், சோழர்களுக்கும் நீண்டகாலப் பகை இருந்ததாலும், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர், ஏராளமான தமிழ்நாட்டுப் படைகளையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் இலங்கையில் வைத்திருக்கவேண்டி இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருந்திருப்பார்கள். இப்பகுதிகளில் வாழ்ந்த [[சிங்களவர்]]கள் [[பௌத்தர்]]கள் என்பதால், இந்துக்களின் வழிபாட்டிடங்கள் இங்கே இருந்திருக்க முடியாது. எனவே சோழர் ஆட்சிக்காலத்தில் பல இந்துக் கோயில்கள் பொலநறுவையில்பொலன்னறுவையில் அமைக்கப்பட்டன.
 
==கோயில்களின் விபரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இந்துக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது