வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: my:လေယာဉ်တင်သင်္ဘော
வரிசை 8:
 
== வரலாறு ==
பலூன் தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து கவனிப்புத் தேவைகளுக்காக பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் [[நிலைத்த இறக்கை வானூர்திகள்வானூர்தி]]கள் அறிமுகமான பின்னர், 1910 ஆம் ஆண்டில் [[அமெரிக்கக் கடற்படை]]க் கப்பலில் ஒன்றில் இருந்து முதல் வானூர்தி பறந்து சென்றது. தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1920 களின் நடுப் பகுதியளவில் நடந்துகொண்டிருந்த இந்தப் புரட்சி, [[எச். எம். எசு ஏர்மசு]], ஓசோ, [[லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்]]கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது.
 
[[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. [[யூ. எசு. எசு பாக்]] போன்ற காவல் வானூர்தி தாங்கிக் கப்பல்கள் இரண்டாம் உலகப் போரின்போதே கட்டப்பட்டன. சில வானூர்தி தாங்கிக் கப்பல்கள் இத் தேவைக்காகவே கட்டப்பட்டபோதிலும், வேறு பல, [[கடற்படைக் கப்பல்]]களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், [[ஈரூடகத் தாக்குதல்]]களை நடத்துவதற்குமான ஒரு தற்காலிக ஏற்பாடாக [[வணிகக் கப்பல்]]களில் மாற்றம்செய்து உருவாக்கப்பட்டவையாக இருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது