இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
==தேர்தல் முறை==
{{also|இந்திய வாக்காளர் குழு}}
குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இந்தியா [[குடியரசு நாள் (இந்தியா)|ஜனவரி 26, 1950]]ல் குடியரசானது. அதுவரை “இந்தியன் யூனியன்” அல்லது “இந்திய டொமீனியன்” என்ற அரசாட்சி அமைப்பாக இருந்த இந்தியாவின் நாட்டுத் தலைவராக “கவர்னர் ஜெனரல்”. இருந்தார். குடியரசானவுடன், குடியரசுத் தலைவர் இந்தியாவின் நாட்டுத் தலைவர் ஆனார். [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின்]] தலைவராக இருந்த [[ராஜேந்திர பிரசாத்]] குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். பின்னர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் உருவாக்கபப்ட்டன. 1952ம் இம்முறைகள் “இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952” என்ற பெயரில் சட்டமாக இயற்றப்பட்டன.<ref>[http://eci.nic.in/eci_main/ElectoralLaws/HandBooks/The_Presidential_and_Vice-Presidential_Elections_Act-1952.pdf The presidential and vice-presidential elections act, 1952]</ref> இவ்விதிகளின் படி குடியரசுத் தலைவர் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் அடங்கிய [[இந்திய வாக்காளர் குழு|வாக்காளர் குழுவினால்]] (electoral college) தேர்ந்தெடுக்க்கப்பட்டார். இந்த தேர்தல் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடத்தப்படும்.<ref>[http://eci.gov.in/Presidential/President%20of%20India%20(Election%202007).pdf 2007 presidential elections]</ref> 1952 தேர்தல் சட்டம் 1974 மற்றும் 1977ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது.
 
குடியரசுத் தலைவர் தேர்தல்கள் [[இந்திய தேர்தல் ஆணையம்|இந்திய தேர்தல் ஆணையத்தால்]] நடத்தப்படுகின்றன. வாக்காளர் குழுவில் இடம்பெற்றுள்ள் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அவரவர் மாநில மக்கள்தொகை மற்ற சட்டமன்றங்களின் பலத்தைப் பொறுத்து மாறும். மேலும் வாக்காளர் குழு வாக்குகளில் சுமார் 50% மதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், மீதமுள்ள 50% சட்டமன்ற உறுப்பினர்களிடமும் உள்ளது. 35 வயது மதிக்கத்தக்க இந்தியக் குடிமகன் எவரும் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யலாம. ஆனால் குறிப்பிட்ட வைப்புத் தொகை கட்டுபவர்கள் மேலும் குறிப்பிட்ட வாக்காளர் குழு உறுப்பினர்களால் முன்மொழிய மற்றும் பின்மொழியப்படுபவர்களின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வாக்குப்பதிவு டெல்லியிலும் மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுள் இருவருக்கு வாக்களிப்பர் - முதல் தெரிவு மற்றும் இரண்டாம் தெரிவு என இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
 
வாக்குகள் எண்ணப்படும் போது முதல் சுற்றின் முடிவில் எந்த வேட்பாளரும் வாக்காளர் குழுவில் 50% வாக்குகளைப் பெறவில்லையெனில் தேர்தல் விதிகளின் படி தெர்தல் அடுத்த சுற்றுகளுக்கு நகர்ந்து இரண்டாம் தெரிவு வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்த வேட்பாளர் நீக்கப்பட்டு அவரை முதல்த் தெரிவாகத் தேர்ந்தெடுதிருந்த வாக்காளர்களின் இரண்டாம் தெரிவு வாக்குகள் பிற வாக்களர்களுக்குப் பிரித்தளிக்கப்படும். இவ்வாறு
இறுதியாக இரு வாக்காளர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் வரை சுற்றுக்கள் தொடரும். இறுதிச் சுற்றில் 50% மேல் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தேர்தல் குறித்த மேல் முறையீடுகளை நேரடியாக [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதி மன்றத்தில்]] முறையிட வேண்டும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது