தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தியாகு''' இந்தியாவில் இடதுசாரி புரட்சியை நம்பி [[நக்சலைட்]] களமுனைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர். முதலில் [[சாரு மஜூம்தார்]] வழிநடத்தலை ஏற்று "அழித்தொழிப்பு" நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.<ref>http://www.keetru.com/literature/interview/thiyagu_1.php</ref> 1960களில் ஒரு நிலச்சுவாந்தாரைக் கொலை செய்ததற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசத்தின் போது அழித்தொழிப்பு வன்முறை இந்திய சூழலுக்கு ஏற்புடையதல்ல என்று தியாகு மனம் மாறினார். இந்திய பொதுவுடமைக் கட்சியிலிருந்து (மார்க்சியம் லெனினியம்) விலகினார். 1980களில் அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 1985ல் விடுதலை செய்யப்பட்டார். பின்பு [[சிபிஎம்|மார்கிசிய கம்யூனிஸ்ட் கட்சியில்]] இணைந்தார். தற்போது [[பழ. நெடுமாறன்|நெடுமாறனின்]] தமிழ் தேசிய இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிறார். அண்மையக் காலங்களில் [[மக்கள் தொலைக்காட்சி]]யில் சங்கப்பலகை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இவர் இடதுசாரி சிந்தனைகளை தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றுள் முதன்மையானது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] ஆகும். பல தூயத் தமிழ் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.<ref>[http://www.keetru.com/literature/interview/thiyagu.php நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்]</ref> .
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது