பிலகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிலகரி''' இருபத்தொன்பதாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:40, 18 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
பிலகரி இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சுத்த மத்திமம் (ம1) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 க3 ப த2 ச் |
அவரோகணம்: | ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.