காமிகாகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
பூர்வபாகத்தில், ஆகமங்களின் தோற்றம், அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள், கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள், விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் கோயிற் [[கட்டிடக்கலை]] மற்றும் [[சிற்பம்|சிற்பங்கள்]] தொடர்பான விடயங்கள் மிகவும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந் நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
 
காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள [[கட்டிடம்]] மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான [[மயமதம்]], [[மானசாரம்]] போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்<ref>Gaur Niketan Ananth (Editor), ''Stapathya Ved-Vastu Sastra Ideal Homes, Colony and Town Planning'', New Age Books, New Delhi, 2002. p.13</ref>. ''மயமதம்'' எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த [[புரூனோ டாகென்ஸ்]] (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும் எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்<ref>Bruno Dagens (Text Editor and Translator), Kapila Vatsayan (General Editor), ''Mayamatam Treatise of Housing, Architecture and iconography, Volume 1'', Kalamulasastra Series - 14, Indira Gandhi National Centre for Arts and Motilal Banarsidass publishers Pvt. Ltd. Delhi, 1994, Reprint 2000. p. xliv</ref>.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காமிகாகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது