ஏ.வி.எம். கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
*நிலத்தடி நீரின் மட்டம் உயர்ந்து கடல் நீர் உட்புகுவது குறையும்
==இக்கால்வாய் திட்டத்தால் வரும் பாதிப்புகள்==
* பல ஆண்டுகளாக பயன்படாமல் இருந்த கால்வாய்ப் பகுதி தற்போது குடியேற்றப் பகுதியாகி விட்டது. பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்கள் வரி செலுத்தி, பட்டா பெற்றுள்ளதால் இந்நிலத்துக்கு சட்ட ஏற்பும் கிடைத்துவிட்டது. இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் போது இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீடு நிலங்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
*நூற்றாண்டுகளுக்கு முன் ஆண்ட மன்னர்களின் காலத்தில் அவர்களின் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நீர்வழி போக்குவரத்தாக அமைந்திருந்த இந்த கால்வாயானது
மன்னராட்சி முடிவிற்கு வருவதற்கு முன்பே அதில் நீர்வழி போக்குவரத்து கைவிடப்பட்டு பராமரிப்பின்றி போனது.பின்பு வந்த காலகட்டத்தில் மன்னராட்சி முடிந்து,
மக்களாட்ச்சி வந்தபோது வசதி படைத்த சிலரால் தென்னை மற்றும் பிற விளைநிலங்களாக இப்பகுதியானது உருமாற்றப்பட்டு பின்னர் பட்டா நிலங்களாக மாற்றி,
இன்றைய காலகட்டத்தில் வீட்டுமனைகளாகவும் மாறிவிட்டது. இச்சூழ்நிலையில் இன்றைய குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பினாலும்,2004
டிசம்பர் மாதம் 26 ல் உண்டான சுனாமி பேரலையினாலும் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் உடைமைகள் அனைத்தையும் இழந்த மக்கள் தங்கள் வசிப்பிடங்களை
பெருவாரியாக மேற்குறிப்பிட்ட முன்பு எ வி எம் கால்வாய் இருந்ததாக கருதப்படும் பகுதியில் அமைந்து வசித்து வருகின்றனர். இதில் முழுக்க முழுக்க அரசு கிராம
நிர்வாக அலுவலகம், மற்றும் வட்டார அரசு நில பதிவு அலுவலகங்களின் அங்கிகாரத்துடன் கிடைக்கப்பெற்ற பட்டா மற்றும் நிலத்திற்கு அதற்குரிய விலையும்
கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட வீடுகளாகவும், அவ்வீடுகளின் உடைமையாளர்கள் அரசுக்கு சேர வேண்டிய வீட்டுவரியினையும் வருடாவருடம் முறையாக
செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் முறைப்படி தனி உடமையாக்கப்பட்டுள்ள பல அரசு நிலங்களின் வரிசையில் இந்திலத்தையும் அறிவிப்பதற்கு அரசு தரப்பில் ஏன் தயங்குகிறார்கள் என
வினவினால் அதற்கு எதிற்பாராத பதில்தான் வருகிறது. மக்கள் நலன் கருதாத குறிப்பாக தமிழக மீனவர்களின் நலன் கருதாத தமிழக அரசு, இப்பகுதி மக்களுக்கும்
எந்தவித முன் ஏற்பாடும் செய்யாமல் அவர்கள் வசிப்பிடங்களை நாசம் செய்யும் எ வி எம் கால்வாய் திட்டத்தினை கையில் எடுக்கப்போவதாக அறிக்கை ஒன்றினை
அவ்வப்போது அறிவித்தபடி உள்ளனர். இதனால் முன்பு சுனாமி மற்றும் கடலரிப்பால் வீடு, உடமை, உறவினர்களை பறிகொடுத்த ஏழை எழிய குமரி மாவட்ட
கடலோர கிராம மக்கள் அரசு தரப்பில் கூறப்பட்ட இவ்வறிக்கையினால் மேலும் அவதிக்கும், பெரும் மன உளச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ.வி.எம்._கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது