மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறுகிறது:முதற்கட்டத்தில் இல்லங்களும் வீட்டெண்களும் பட்டியலிடப்படுகின்றன;இரண்டாம் கட்டத்தில் தனிநபர் தகவல்கள் பதியப்படுகின்றன.தற்போதைய கணக்கெடுப்பில் சூன் 1,2010 முதல் சூலை 15 வரை முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்தது. இரண்டாம் கட்டப் பணி பெப்ரவரி 9, 2011 முதல் பெப்ரவரி 28 வரை நடைபெறுகிறது. தற்போதைய கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகள்: நபர் விபரம், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், எஸ்.சி.,/எஸ்.டி., மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழி, எழுத்தறிவு, கல்விநிலையம் செல்லும் நிலை, அதிகபட்ச கல்வி, வேலை, தொழில், பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடம்பெயர்ச்சிக்கான காரணம், கிராம/நகரில் தங்கிய விபரம், பிறந்த மொத்த குழந்தைகள், உயிருடன் வாழும் குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த மொத்த குழந்தைகள் போன்ற 29 கேள்விகளுக்கு பதில் சேகரிக்கப்படுகிறது.
 
==இலங்கையில்==
[[இலங்கை]]யின் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியில் [[கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை]]யால் எடுக்கப்படுகிறது.உள்நாட்டுப் போரின் விளைவாக கடந்த முப்பதாண்டுகளில் நாடுதழுவிய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. போர் முடிந்த சூழலில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நிகழ உள்ளது.<ref>{{cite web|url=http://www.sundayobserver.lk/2010/05/16/new30.asp |title=Sri Lanka News |publisher=Sundayobserver.lk |date=2010-05-16 |accessdate=2010-11-30}}</ref>நாட்டின் அனைத்து கிராம நிலதாரி (GN) கோட்டங்களிலும் கணக்கெடுப்பு நடைபெறும்.
 
இலங்கையில் முதல் அறிவியல்பூர்வ கணக்கெடுப்பு 27 மார்ச்சு 1871ஆம் ஆண்டில் நடந்தது. கடைசி நான்கு கணக்கெடுப்புகள் 1963, 1971, 1981 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்தது. [[ஈழப் போர்|ஈழப்போரின்]] விளைவாக 2001ஆம் ஆண்டு 18 [[இலங்கையின் மாவட்டங்கள்| மாவட்டங்களில்]] மட்டுமே எடுக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு மதிப்பீடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகைக்_கணக்கெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது