சுயாட்சிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை |
பிழைதிருத்தம் |
||
வரிசை 1:
'''சுயாட்சிக் கட்சி''' (''Swaraj Party'') அல்லது ''சுவராஜ் கட்சி'' அல்லது ''சுவராஜ்ய கட்சி
1919ல் ஆரம்பிக்கப்பட்ட [[ஒத்துழையாமை இயக்கம்]] 1922ல் [[மகாத்மா காந்தி]]யால் கைவிடப்பட்டது. 1922ல் [[உத்தர பிரதேசம்|உத்தர பிரதேசத்தில்]] [[சவுரி சாரா நிகழ்வு|சவுரி சாரா]] என்ற இடத்தில் காவல் நிலையம் ஒன்றை போராட்டக்காரர்கள் கொளுத்தியதால் பல காவல்துறையினர் உயிரிழந்தனர். தனது [[சத்தியாகிரகம்|அறவழிப் போராட்டம்]] வன்முறை வழியில் திசை மாறுவதை விரும்பாத காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் இதனை காங்கிரசு கட்சியுள் பலரும் பிற தேசியவாதிகளும் ஏற்கவில்லை. இவர்கள் காந்தியின் தலைமையில் அதிருப்தி கொண்டனர். மேலும் மாநில மற்றும் இந்திய சட்டமன்றங்களில் காங்கிரசு பங்கு பெறாது என்ற காந்தியின் கொள்கையினையும் அவர்கள் எதிர்த்தனர். இச்சட்டமன்றங்கள் காலனிய ஆளுனர்களால் ஆட்டுவிக்கப்பட்டும் கைப்பாவைகள் என காந்தியும் அவரது ஆதரவாளர்களும் கருதினர். தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்றத்துக்குச் செல்வது அரசுடன் ஒத்துழைப்பதுக்கு சமமென்றும் கருதினர். ஆனால் காங்கிரசு அதிருப்தியாளர்கள் தேர்தல்களில் பங்கேற்று, அரசு எந்திரத்தை உள்ளிருந்தே எதிர்க்க வேண்டுமென்று நினைத்தனர்.
டிசம்பர் 1922ல் நடந்த காங்கிரசின் கான்பூர் மாநாட்டில் இப்பிளவு வெளிப்படையாக வெடித்தது. [[சித்தரஞ்சன் தாஸ்]], [[என். சி. கேல்கார்]], [[மோதிலால் நேரு]] போன்றோர் காங்கிரசு-கிலாபத் சுவராஜ் கட்சி என்ற புதிய அமைப்பினைத் தொடங்கினர். ஆனால் 1907ம் ஆண்டு [[சூரத்]] மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பூசல் ஏற்பட்டு கட்சி பிளவுற்றதைப் போல் இம்முறை நிகழ இரு தரப்பினரும் விரும்பவில்லை. அதனால் வெளிப்படையாக பிரிந்து செல்லாமல் ஒரு சமரசம் செய்து கொண்டனர். அதன்படி சுயாட்சிக் கட்சி ஆதரவாளர்கள் காங்கிரசு உறுப்பினர்களாக இருந்து கொண்டே சட்டமன்றத் தேர்தல்களில்
{{இந்திய விடுதலை இயக்கம்}}
|