யெரெவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Coord|40.183333|44.516667|type:city_region:AM|format=dms|display=ti..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:07, 6 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

யெரெவான் (ஆர்மீனியம்: Երևան or Երեւան, ஆர்மீனிய உச்சரிப்பு: [jɛɾɛˈvɑn]) ஆர்மீனியாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். ஹ்ராஸ்டன்(Hrazdan) நதிக் கரையில் அமைந்துள்ள இந்நகரமே ஆர்மீனியாவின் நிர்வாக, கலை, கலாசார மற்றும் தொழிற்துறை மையமாகும். இது 1918 முதல் தலைநகரமாக விளங்குகின்றது.

யெரெவான்
Երևան
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
அரராத் மலைத்தொடர் பின்னணியுடன் யெரெவான்
யெரெவான்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யெரெவான்
சின்னம்
நாடு ஆர்மீனியா
தோற்றம்782 கி.மு.
அரசு
 • மேயர்கரென் கரபெட்யன் (Karen Karapetyan)
பரப்பளவு
 • நகரம்300 km2 (100 sq mi)
ஏற்றம்989.4 m (3,246.1 ft)
மக்கள்தொகை (2009)
 • நகரம்1,121,900
 • அடர்த்தி4,896/km2 (12,680/sq mi)
 • பெருநகர்1,245,700
நேர வலயம்ஒ.ச.நே.+4 (ஒசநே+4)
 • கோடை (பசேநே)ஒ.ச.நே.+5 (ஒசநே+5)
தொலைபேசி குறியீடு+374 10
இணையதளம்www.yerevan.am
Sources: Yerevan city area [1][2][3] Sources: City population [4]

யெரெவானின் வரலாறு கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரை பழமையானதாகும். ஆர்கிஸ்தி I (Argishti I) மன்னனால் கி.மு. 782 இல் அராரத் சமவெளியின் மேற்குக் கரையில் எரெபுனி கோட்டை (Erebuni Fortress) அமைக்கப்பட்டது இந்நகரின் தோற்றம் ஆகும்.[5] முதலாம் உலகப்போரின் பின்னர் ஆர்மீனிய இன அழிப்பில் தப்பிய ஆயிரக்கணக்கான ஆர்மீனியர்கள் இவ்விடத்தில் குடியேறியதை அடுத்து, ஆர்மீனியாவின் தலைநகராக இது மாறியது. ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடானதிலிருந்து இந்நகரம் துரித வளர்ச்சியடைந்தது.

2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யெரெவானின் சனத்தொகை 1,121,900 ஆகக் காணப்பட்டது.[6]

யுனெஸ்கோவினால், 2012 ஆம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகரமாக யெரெவான் அறிவிக்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

  1. Armstat Yerevan
  2. Area of Yerevan
  3. Aarhus: Yerevan
  4. Armstat:Population "Armenia's Population". {{cite web}}: Check |url= value (help)
  5. Katsenelinboĭgen, Aron (1990). The Soviet Union: Empire, Nation and Systems. New Brunswick: Transaction Publishers. பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0887383327. 
  6. "Population of each district in Yerevan according to the city's official website". Yerevan.am. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  7. UN News Cnetre "Yerevan named World Book Capital 2012 by UN cultural agency". {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெரெவான்&oldid=710364" இலிருந்து மீள்விக்கப்பட்டது