வன்பரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான்.
 
நள்ளி தன்னை எப்படிப் பேணினான் என்பதை இப்பாடலில் குறிப்பிடுகிறார். குளிரில் நடுங்கும் பருந்தின் சிறகு போல அவரது ஆடை கிழிந்திருந்ததாம். தன்னை அறியாமல் கால் போன வழியில் தனக்குத் தெரியாத வேறொரு நாட்டுக்கு வந்துவிட்டாராம். வழியில் ஒருவன் இவரது உடல் வருத்தத்தையும், உள்ள உலைவையும் கண்டானாம். அவன் மானை வேட்டையாடிக் குருதி படிந்த கழல் அணிந்திருந்தானாம். தலையில் திருமணி முடி அணிந்திருந்தானாம். அதனால் ஒரு செல்வத் தோன்றல் போல் காணப்பட்டானாம். அவனைப் பார்த்ததும் புலவர் அவனைத் தொழுது எழுந்தாராம். அவனோடு வந்த இளையர் வருவதற்கு முன் தன்னிடமிருந்த ஞெலிகோலில் தீ மூட்டி தான் வேட்டையாடிய மானைச் சுட்டுப் புலவரும் அவரது சுற்றத்தாரும் தின்னும்படி கொடுத்தானாம். அவர்கள் வயிறார உண்டு பசி நீங்கி, அருவி நீரைப் பருகிவிட்டுச் செல்லத் தொடங்கினார்களாம். உடனே அவன் தன் மார்பில் அணிந்திருந்த விலைமதிக்க முடியாத ஆரத்தையும், கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றிப் புலவர்க்குக் கொடுத்தானாம். புலவர் அவனிடம், "நீர் யார்? எந்த நாட்டில் இருப்பவர்?" என்று வினவினாராம். அவன் எதுவுமே சொல்லாமல் போய்விட்டானாம். பின்னர் அங்கே வந்த சிலரைக் கேட்டாராம். அவன் தோட்டி மலை மக்களைக் காப்பவனாம்."நளிமலை நாடன் நள்ளி"யாம்.
 
===புறநானூறு 152 வல்வில் ஓரி===
"https://ta.wikipedia.org/wiki/வன்பரணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது