புணர்ச்சிப் பரவசநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: ia:Orgasmo
சி தானியங்கிஇணைப்பு: mzn:اوج لذت جنسي; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Gustav Klimt 010.jpg|thumb|280px|புகழ்பெற்ற ஓவியர் [[குசுத்தாவு|குசுத்தாவின்]] விருப்பமான [[கருப்பொருள்]] ''தன்னிறைவுற்ற பெண்''; இப்படத்தில் பாலுணர்வுப் பரவசநிலையைத் தங்கச் சிதறலைக் கொண்டு உணர்த்தியுள்ளார்.]]
 
'''புணர்ச்சிப் பரவசநிலை (''Orgasm'')''' அல்லது '''பாலின்ப உச்சி (''sexual climax'')''' என்பது நெடிய [[பாலுணர்வு]]த் தூண்டலின்பின் ஏற்படும் [[உடல்]], [[உளவியல்]] (''psychology''), மற்றும் [[மெய்ப்பாடு]] (''emotion'') நிலையிலான நிறைவளிக்கும் [[தூண்டற்பேறு|தூண்டற்பேற்றைக்]] குறிக்கும். இது நிகழும்போது [[விந்து தள்ளல்]], மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் (''spasms'') ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன.
 
== இருபாலரிலும் தூண்டற்பேறு ==
[[ஆண்]]களும் [[பெண்]]களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர். இருப்பினும் பெருமகிழுணர்வு (''euphoria''), கீழ் இடுப்புத் [[தசை]]களுக்குக் கூடுதல் [[குருதி]]யோட்டம், ஒழுங்குடனான (''rhythmic'') இடுப்புத் தசைச் சுருக்கங்கள், [[புரோலாக்டின்]] சுரப்பதால் ஏற்படும் அயர்வு உணர்வு போன்ற சில பொதுவான விளைவுகளைத் தவிர பல வகைகளில் இருபாலரிலும் மாறுபட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
 
== ஆண்களில் தூண்டற்பேறு ==
மனிதரில் ஆண்பாலரில் புணர்ச்சிப் பரவசநிலையின்போது [[சுக்கியம்]] (''prostate''), சிறுநீர்வழி (''urethra''), மற்றும் [[ஆண்குறி]]யின் அடிப்பகுதி தசைகள் ஆகியவற்றின் விரைவான, ஓரிசைவுடனான, சுருக்கங்கள் ஏற்படும். பெரும்பாலும் இதே வேளையில் [[விந்துப் பாய்மம்]] (''semen'') ஆண்குறி வழியாக [[சுற்றிழுப்பசைவு]] (''peristalsis'') முறையில் மிகுந்த அழுத்தத்துடன் [[விந்து தள்ளல்|வெளியேற்றப்]] படுகிறது. ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (''refractory period'') உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.
 
== பெண்களில் தூண்டற்பேறு ==
பெண்களில் பரவசநிலைக்கு முன்பு [[புணர்புழை]]யின் ([[யோனி]], ''vagina'') சுற்றுச்சுவர் சில [[சுரப்பி]]களின் செயலால் நனையும். கூடவே, கூடுதல் குருதியோட்டம் காரணமாக பெண்குறியின் (''clitoris'') மென்திசுக்களில் குருதி தங்குவதன்மூலம் அது விரிவடைகிறது. சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் [[நாணம்]] அடைவது போன்று மேனி சிவக்கிறது. பரவசநிலை அண்மிக்கும்போது பெண்குறி அதன் முகப்பு மூடியின்கீழ் (''clitoral hood'') சென்று உள்வாங்கிவிடுகிறது. மேலும், சிற்றுதடுகள் (''labia minora'') இருண்டுவிடுகின்றன. பரவசநிலை மேலும் நெருங்குகையில், புணர்புழை 30 [[விழுக்காடு]] வரை சுருங்குவதாலும், பெண்குறியின் திசுக்கள் உள்வருதலாலும் பெரிதும் அடைபட்டுப்போய் ஆண்குறியைக் கவ்விக் கொள்கிறது. அதன் பின் [[கருப்பை]] (''uterus'') தசைகள் சுருக்கம் காண்கின்றன. முழுமையான பரவசநிலையின்போது கருப்பை, புணர்புழை, மற்றும் கீழிடுப்புத்தசைகள் (''pelvic muscles'') ஆகியவை ஓரிசைவுடன் சுருங்கி விரிகின்றன. ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.<ref>{{cite web
| last =Berman
வரிசை 21:
}}{{ஆ}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://health.yahoo.com/topic/sexualhealth/overview/article/pt/Psychology_Today_articles_pto-19991101-000038 பாலுணர்வுப் பரவசநிலை பற்றிய கட்டுரை]
 
 
[[பகுப்பு:பாலுறவு]]
வரி 72 ⟶ 71:
[[ml:രതിമൂര്‍ച്ഛ]]
[[ms:Puncak syahwat]]
[[mzn:اوج لذت جنسي]]
[[nds:Orgasmus]]
[[nl:Orgasme]]
"https://ta.wikipedia.org/wiki/புணர்ச்சிப்_பரவசநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது