"முடத்திருமாறன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,857 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
இவனது பாடல்கள் சொல்லும் செய்தி
==நற்றிணை 105==
இவன் இந்தப் பாடலில் குட்டுவன் என்னும் சேர மன்னனின் குடவரையைக் குறிப்பிடுகிறான்.
===குட்டுவன் குடவரை===
குட்டுவன் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவைச் சூடித் தலைவியின் கூந்தல் மணக்குமாம். குடமலை என்றால் மேலைமலைத்தொடர். குடவரை என்றால் கொல்லிமலை.
 
பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலத்து இடைவழியில் தன் காதலி தன் பிரிவால் படும் முன்பத்தை எண்ணுகிறான். கலங்குகிறான்.
====அவன் சென்ற பாலைவழி====
இலவமரத்து முள்ளைப் பற்றி ஏறிய கொடி, உலர்ந்து போனதை, கொடிய காற்று வீசி அதிரச் செய்யுமாம். அந்த வழி மூங்கில் காடுகள் நிறைந்ததாம். விரைந்து நடக்கும் யானைக் கூட்டமே இந்த வழியில் நடக்கும்போது துன்புறுமாம். நீரோ, நிழலோ இல்லையாம். (இப்படிப்பட்ட வழியில் இன்னலுறும்போது தலைவன் தன் தலைவியை நினைக்கிறான்)
 
==நற்றிணை 228==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/716633" இருந்து மீள்விக்கப்பட்டது