இயேசு பேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி சேர்க்கை
வரிசை 155:
*''பர்சபா'' - (Βαρσαββας = Barsabbas). இது bar-Šabbâ ='son of the Sabbath' = ஓய்வுநாளின் மகன் எனப் பொருள்படும். ([[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 1:23]]).
*''பர்னபா'' (Βαρναβας = Barnabas). இது Bar-Navâ என்னும் அரமேயப் பெயரிலிருந்து வருகிறது. இதன் பொருள் ''இறைவாக்கின் மகன்'' (son of prophecy) அல்லது ''இறைவாக்கினன்'' ஆகும். ([[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 4:36]]).
 
===''கேபா'' (Κηφας = Cephas/Kephas)===
 
[[யோவான்|யோவான் 1:42]]
 
{{cquote|இயேசு சீமோனைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய் என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.}}
 
[[1 கொரிந்தியர் (நூல்)|1 கொரிந்தியர் 1:12]]
 
{{cquote|உங்களுள் ஒவ்வொருவரும் 'நான் பவுலைச் சார்ந்த்துள்ளேன்' என்றோ 'நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, 'நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.}}
 
[[கலாத்தியர் (நூல்)|கலாத்தியர் 1:18]]
 
{{cquote|மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன்.}}
 
மேற்காட்டிய பாடங்களில் ''கேபா'' என்னும் பெயர் சீமோன் பேதுருவுக்கு ஒரு சிறப்புப் பெயராகக் கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சீமோன் என்பது இயற்பெயர்; சிறப்புப் பெயர் ''கேபா'' என்பதற்குப் ''பாறை'' என்பது பொருள். இது பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் ''இராய்'' என்றிருந்தது. தெலுங்கு மொழிவழக்கில் அது ''கல்'', ''பாறை'' என்னும் பொருளுடையது. ''கேபா'' என்பது கிரேக்கத்தில் பெண்பால் என்பதால் அது ஆண்பாலாக மாற ''கேபாஸ்'' (Κηφας = Cephas/Kephas) என்றாயிற்று. அதன் கிரேக்க மொழிபெயர்ப்பும் ''பேத்ரா'' என்னும் பெண்பால் சொல்லிலிருந்து ''பேத்ரோஸ்'' (Πέτρος = Petros) என ஆண்பாலாக மாற்றப்பட்டது.
 
===''தோமா'' (Θωμας = Thomas)===
 
[[யோவான்|யோவான் 11:16]]
 
{{cquote|திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.}}
 
தோமாவின் பெயர் பிற திருத்தூதர் பெயர்களோடு நான்கு நற்செய்திகளிலும் காணப்படுகிறது. திருத்தூதர் பணிகள் நூலிலும் உள்ளது. இருப்பினும் [[யோவான்|யோவான் நற்செய்தியில்]] மட்டுமே தோமாவைப் பற்றிய கூடுதல் தகவல்கள் உள்ளன (காண்க: [[யோவான்|யோவான் 11:16; 20:24; 21:2]]).
 
''தோமா'' (תאומא = tômâ) என்னும் அரமேயப் பெயருக்கு ''இரட்டையர்'' என்பது பொருள்.
 
===''தபித்தா'' (Ταβειθα = Tabitha)===
 
[[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 9:36]]
 
{{cquote|யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருடைய பெண் சீடர் ஒருவர் இருந்தார். அவர் தொற்கா என்றும் அழைக்கப்பட்டார்.}}
 
இப்பெண் சீடரின் பெயர் அரமேயத்திலும் (''தபித்தா'' - טביתא) கிரேக்கத்திலும் (''தொற்கா'' - Δορκας = Dorkas) தரப்பட்டுள்ளது. இதன் பொருள் ''பெண் மான்'' என்பதாகும்.
 
==புதிய ஏற்பாட்டில் அரமேய மொழியில் வரும் இடப் பெயர்கள்==
 
பல இடங்களின் பெயர்கள் புதிய ஏற்பாட்டு நூல்களில் அரமேய மொழியில் உள்ளன. சில எடுத்துக்காட்டுகள்:
 
===''கெத்சமனி'' (Γεθσημανει = Gethsemane)===
 
[[மத்தேயு|மத்தேயு 26:36]]
 
{{cquote|பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார்.}}
 
[[மாற்கு|மாற்கு 14:32]]
 
{{cquote|பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள்.}}
 
இயேசு கைது செய்யப்படுமுன் தம் சீடர்களை அழைத்துக் கொண்டு ஒலிவத் தோட்டம் சென்று இறைவேண்டலில் ஈடுபட்டார். அவர் சென்ற இடம் ''கெத்சமனி'' என்னும் பெயர் பெற்றது. அப்பெயரின் கிரேக்க வடிவம் எபிரேய மூலத்தில் 'Gath-Šmânê' = גת שמני என வரும். அதன் பொருள் ''ஒலிவ எண்ணெய் ஆலை'' என்பதாகும்.
 
===''கொல்கொதா'' (Γολγοθα = Golgotha)===
 
[[மாற்கு|மாற்கு 15:22]]
 
{{cquote|அவர்கள் 'மண்டைஓட்டு இடம்' எனப் பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்.}}
 
[[யோவான்|யோவான் 19:17]]
 
{{cquote|இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு 'மண்டைஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார்.}}
 
''கொல்கொதா'' என்னும் பெயர் அரமேயத்திலிருந்து வருகிறது. ''மண்டைஓடு'' என்பது அதன் பொருள். பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் ''கபாலஸ்தலம்'' என்றிருந்தது. ''வுல்காத்தா'' (Vulgata = Vulgate) என்னும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் calvaria (ஆங்கிலத்தில் calvary) என்பதும் இப்பொருளையே தரும்.
 
அரமேயத்தில் இது גלגלתא = Gûlgaltâ என்று இருந்திருக்கும்.
 
===''கபதா'' (Γαββαθα = Gabbatha)===
 
[[யோவான்|யோவான் 19:13]]
 
{{cquote|இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டிவந்தான். 'கல்தளம்' என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் 'கபதா' என்பது பெயர்.}}
 
''கபதா'' என்பது அரமேயம் என்பர் அறிஞர். இதன் பொருள் ''உயர்ந்த இடம்'', ''மேடை'' என்பதாகும். இதன் அரமேய வடிவம் גבהתא = Gabbatha.
 
 
==ஆதாரங்கள்==
<references/>
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
[[பகுப்பு:இயேசு]]
[[பகுப்பு:சமயங்கள்]]
[[பகுப்பு:கிறித்தவம்]]
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:விவிலிய நபர்]]
[[பகுப்பு:கிறித்தவ சமய நூல்கள்]]
 
[[en:Aramaic of Jesus]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_பேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது