கலிலேயக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
(வேறுபாடு ஏதுமில்லை)

15:15, 19 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

கலிலேயக் கடல் என்றும் கெனசரேத்து ஏரி என்னும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது.

கலிலேயக் கடல்
ஆள்கூறுகள்32°50′N 35°35′E / 32.833°N 35.583°E / 32.833; 35.583
வகைசீர் வெப்பநிலை
முதன்மை வரத்துமேல் யோர்தான் ஆறும் வடிகால்களும் [1]
முதன்மை வெளியேற்றம்கீழ் யோர்தான் ஆறு, நீராவியாதல்
வடிநிலப் பரப்பு2,730 km2 (1,050 sq mi) [2]
வடிநில நாடுகள்இசுரயேல், சிரியா, லெபனான்
அதிகபட்ச நீளம்21 km (13 mi)
அதிகபட்ச அகலம்13 km (8.1 mi)
மேற்பரப்பளவு166 km2 (64 sq mi)
சராசரி ஆழம்25.6 m (84 அடி)
அதிகபட்ச ஆழம்43 m (141 அடி)
நீர்க் கனவளவு4 km3 (0.96 cu mi)
நீர்தங்கு நேரம்5 years
கரை நீளம்153 km (33 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்-214 m (702 அடி)
Islands2
மேற்கோள்கள்[1][2]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இயற்கைச் சூழல்

மனித இதயம் போன்ற உருவமுடைய இதனைக் கலிலேயக் கடல் என்பதோடு (மத் 4:18, 23; மாற் 1:16; யோவா 6:1), கெனசரேத்து ஏரி (லூக் 5:1) என்றும் திபேரியாக் கடல் (யோவா 6:1; 21:1) என்றும் அழைப்பது உண்டு. அழகிய நீல நிறத்துடன் தோன்றும் இக்கடல் சராசரி 15 கிலோமீட்டர் நீளமும் ஐந்து கிலோமீட்டர் அகலமும் கொண்டு, ஏறத்தாழ 600 அடி கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. இதன் கரையில் பல பழவகை மரங்களும், வண்ண மலர்ச்செடிகளும் அமைந்து இக்கடலுக்கு அழகூட்டுகிறன. இதன் கரையில் சிறு மலைகள் இருக்கின்றன. இப்பகுதி மிகவும் செழிப்பான இடம். கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்களும், பசுமையான செடி கொடிகளும் பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டுகின்றன.

அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரன இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையிம் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.

இயேசுவின் பணிக்காலத்தில் கலிலேயக் கடல்

இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் (மத் 4:18; மாற் 1:16; லூக் 5:1). இயேசு தமது மலைப்பொழிவை ஆற்றியதும் (மத் 5:1), பல அருங்குறிகளை நிகழ்த்தியதும், அற்புதமாக மீங்கள் பிடிக்கப்பட்ட்தும் இங்கேதான். இக்கடலில்தான் இயேசு நடந்தார் (மத் 14:21-33); இக்கடலில் ஏற்பட்ட புயலை அடக்கினார் (மத் 23:27). மிகச் சிறப்பாக, சாவினின்று உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்கு காட்சியளித்தது இங்குதான் என்பது இக்கடலுக்குப் பெருமை கொணர்ந்தது (யோவா 21:1). இதன் கரையில் உள்ள சில நகரங்கள் இயேசுவின் வாழ்வுடனும் பணியுடனும் அதிகம் தொடர்புடையன.

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 Aaron T. Wolf, Hydropolitics along the Jordan River, United Nations University Press, 1995
  2. 2.0 2.1 Exact-me.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிலேயக்_கடல்&oldid=720712" இலிருந்து மீள்விக்கப்பட்டது