எஸ். எம். கார்மேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
change to el
வரிசை 19:
==மறைவு==
மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்த இவர் 2005 ஜனவரி 18ம் தேதி இயற்கை எய்தினார்.
அவரைப் பற்றி அவரது மூத்த மகன் முரளி கார்மேகம் எழுதிய கட்டுரை0 comments Links to this post
என் தந்தை எஸ்.எம்.கார்மேகம் மறைந்து இம் மாதம் 18ம் தேதியுடன் 5 வருடம் ஆகிறது.
1939ம் ஆண்டு கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் முடியன்-செல்லாயி தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது பிள்ளை. ஆண் வரிசையில் மூத்தவர்.
அவர்மீது எங்களுக்கு மரியாதை கலந்த பயம். எங்களுக்கு மட்டுமல்ல, அவருடன் பிறந்த நான்கு தம்பிகளுக்குமே அப்படித்தான்.
பத்திரிகைத் தொழிலை தன் உயிர் மூச்சாகக் கருதியவர். ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய கர்வம் அவருக்குள்ளும் இருந்ததை நான் கவனித்திருக்கிறேன். அதேவேளை அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம்.
எதிலும் பெர்பெக்சன் இருக்க வேண்டும் என்று கூறுவார். அது வீட்டை ஒதுங்க வைப்பதாக இருந்தாலும் சரி. தன்னை ஒழுங்குபடுத்துவதாக இருந்தாலும் சரி.
 
இலட்சியப் பிடிப்புள்ளவர்களாக நாங்கள் வளர வேண்டும் என்பார். வானத்தைப் பிடிக்க முயற்சி செய்தால்தான், கூரையையாவது எட்டிப் பிடிக்கலாம் என்று அடிக்கடி கூறுவார்.
 
படித்துக் கொண்டிருந்த காலத்தில் நான், தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்கை கனகமணி, மற்றும் இந்துப் பத்திரிகையின் திருச்சி பதிப்பில் பணியாற்றி வரும் என் தம்பி ஸ்ரீதரன் ஆகியோரை எப்படியும் வருடம் ஒரு தடவையாவது உட்கார வைத்து, தான் இந்த நிலைக்கு வர, பட்ட கஷ்டங்கள், அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாக எடுத்துக் கூறுவார். யாராவது முக்கியஸ்தர்கள் போன் செய்தாலேயொழிய அந்த வகுப்பு முடிய எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும்.
அன்றைக்கு கசப்பாக இருந்த அந்த அறிவுரை,இன்றைக்கு வாழ்க்கைத் தத்துவமாக இருக்கிறது.
எங்கோ ஒரு மலைத் தோட்டத்தில் பிறந்து, ஒரு பத்திரிகையாளனாக பரிணமித்து, தமிழகத்தில் வாழ்ந்து, பின்னர் மறைந்தும் போன அவரது வாழ்க்கை இன்னமும் பிரமிப்பாகவே இருக்கிறது. ஆன்மிகம் மீது ஒரு பிடிப்பு வருகிறது.
இன்றளவும் அவரது பெயருக்கு உள்ள செல்வாக்கு எங்களுக்கு அன்றைக்குப் புரியவில்லை.
 
அவர் மறைவுக்குப் பின்னர்தான் தெரிந்தது.
நாங்கள் தவறவிட்டது ஒரு சொர்க்கத்தை
ஒரு நல்ல குருவை
ஒரு நல்ல வழிகாட்டியை
அவரது கைகள் சமுதாயத்திற்காக உழைத்தன.
அவரது கால்கள் சமுதாய வளர்ச்சிக்காக ஓடித் தேய்ந்தன.
என்றோ ஒருநாள் எங்கோ படித்தது தற்போது நினைவுக்கு வருகிறது.
இந்த பூமியில் ஒருவன் குறைந்தபட்சம் 100 வருடம் வாழ வேண்டும் என்றால் ஒன்று வீடு கட்ட வேண்டும். இல்லையென்றால் புத்தகம் எழுத வேண்டும். இல்லையென்றால் பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும்.
அது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
ஆனால் நிறைய கதைகள் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்.
பேரப்பிள்ளைகள் கார்மேகம் என்ற பெயரைக் குடும்பப் பெயராக இணைத்துக் கொண்டு செல்கிறார்கள்.
இதையெல்லாம் இந்தப் பூமியில் எங்கேயே இருந்து தானம் செய்யப்பட்ட விழிகளின் மூலமாக பார்த்து எங்களை, எங்கள் செயல்களை எல்லாம் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் என்ற ஐதீகம் எங்களுக்கு....
 
== வெளிவந்த நூல்கள் ==
வரி 53 ⟶ 25:
*ஈழத்தமிழரின் எழுச்சி
 
==வெளி இணைப்புகள்==
அவரைப்*[http://www.chennaivirakesari.com/2011_01_01_archive.html பற்றிகார்மேகம்பற்றி அவரது மூத்த மகன் முரளி கார்மேகம் எழுதிய கட்டுரை0 comments Links to this post கட்டுரை]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலையக இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._கார்மேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது