எஸ். எம். கார்மேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "2005 இறப்புகள்" (using HotCat)
வரிசை 15:
ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவரது மலையகம், சார்ந்த கட்டுரைகளை மறு பிரசுரம் செய்தன. [[பாரிஸ்|பாரிசி]]லிருந்து வெளிவரும் [[ஈழநாடு (இதழ்)|ஈழநாடு]] இவரது கட்டுரைகளை தொடர்ந்து மறுபிரசுரம் செய்தது. வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் நடத்தப்பட்ட முதல் நான்கு சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளிவர உதவினார். வீரகேசரியில் இருந்து நூல் வடிவில் வெளிவந்த முதல் நூல் ''கதைக்கனிகள்'' என்பது குறிப்பிடத்தக்கது. [[சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்]] கைச்சாத்தாகி இந்நாட்டை விட்டு மலையக மக்கள் வெளியேறியபோது வீரகேசரியில் ''அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்'' எனும் இவருடைய கட்டுரை இம்மக்களின் கண்ணீர் காவியமாகும்.
 
[[மித்திரன்]] வாரமலரில் ''தந்தையின் காதலி'' ''அழைக்காதே நெருங்காதே'', ஆகிய நாவல்களை தொடராக எழுதினார். 23 வருடங்கள் வீரகேசரியில் சிறந்த முறையில் பணியாற்றினார்.
 
 
எஸ்.எம்.கார்மேகத்தைப் பற்றி அவரது நெருங்கிய நண்பர் எச்.எச்.விக்கிரமசிங்க எழுதிய கட்டுரை
 
 
இலங்கையின் முன்னோடி பத்திரிகையாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அமரர் எஸ்.எம்.கார்மேகம். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதில் எமக்குத் தனிப் பெருமை உள்ளது.
 
1965களின் ஆரம்பத்தில் அவரை, கண்டியில் மலைநாட்டு வாலிபர் சங்க மாநாடு ஒன்றில் முதன்முதலில் சந்தித்தது பசுமையாய் நினைவில் பளிச்சிடுகிறது. அப்போது நான் மாத்தளையில் க.பொ.த படித்துக் கொண்டிருந்தேன்.
 
பள்ளிச்சிறுவன் என்றும் பாராமல் என்னிடம் அவர் பணிவோடு பேசி உற்சாகப்படுத்தியது எழுத்துலகில் அந்தச் சின்ன வயதிலேயே எனக்குப் பேரார்வம் ஏற்படச் செய்தது. நானும் 1968ம் ஆண்டு வீரகேசரி குடும்பத்தில் ஒருவனாகச் சேர வழி அமைத்தது.
 
வீரகேசரியில் சேர்ந்தபிறகு அவரது சமூக, இலக்கிய எழுத்துலகப் பணிகளுக்கு ஒத்தாசையாக இருக்க நேர்ந்தது என் வாழ்வில் மிக இளமைப் பருவத்தில் சிறப்பான அனுபவம்.
1960களில் மலையக இளைஞர்களையும், இலக்கிய பேரார்வலர்களையும் வீரகேசரி மிகவும் உற்சாகப்படுத்தி வளர்த்து வருவதில் ஆர்வம் கொண்டிருந்தது. எஸ்.எம்.கார்மேகம், எஸ்.ராமையா ஆகியோர் அதற்கு மூல காரணமாக இருந்தார்கள்.
 
அவர்களுக்குப் பக்க பலமாக இரா.சிவலிங்கம், எஸ்.திருச்செந்துரன், மஸ்கெலிய வே.மூக்கப்பிள்ளை, கவிஞர் தமிழோவியன் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் மலையக இலக்கிய வரலாறு எழுதுபவர்கள் இவர்களை இன்று வசதியாக மறந்து விடுகிறார்கள்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் பிதாமகன் எஸ்.எம்.கார்மேகம், கார்வண்ணன் என்ற பெயரில்தான் எழுதுவார். இரண்டுமே புனைப் பெயர்களைப் போன்று இருப்பதால், இன்றைக்கும் அவரது அசல் பெயர் என்ன என்பதில் சிலருக்கு பெரும் குழப்பம் உள்ளது.
 
அவரோடு சுமார் பத்து ஆண்டுக்காலம் வாழ்ந்து விட்ட காரணத்தால் மலையக மக்களின் சமூக முன்னேற்றத்தில் இவர் எத்தனை ஆர்வம் கொண்டு வாழ்நாள் எல்லாம் பாடுபட்டார் என்பதை நான் நன்கு அறிவேன்.
 
மிகப் பெரிய வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு 1960களில் மீண்டும் உயிர்த்தெழுந்த வீரகேசரி, பயிற்சி பத்திரிகையாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரியிருந்தது.விண்ணப்பித்தவர்களில் 85 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள்.
 
அவர்களில் மூவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டார்கள். அம்மூவரில் ஒருவர் எஸ்.எம்.கார்மேகம். மற்றொருவர் இரா.ஐசக் (மலைத்தம்பி) என்று நினைக்கிறேன்.
(கவிஞர் மலைத்தம்பி சிந்தாமணி பத்திரிகையில் பிரதியாசிரியராக பணியாற்றிய காலத்தில் இந்தத் தகவலை என்னிடம் கூறியிருந்தார்.)
 
1960ம் ஆண்டு முதல், கால் நுற்றாண்டுகளுக்கு மேலாக வீரகேசரிக்காக தன்னை அர்ப்பணித்து இரவு,பகலாக உழைத்தவர். வீரகேசரியின் விலை 10 சதத்தில் இருந்து 15 சதமாக உயர்த்தப்பட்டபோது வரலாற்றுப் பின்னணியில் பத்து லட்சம் பேர் என்ற தொடர் கட்டுரையை எழுதினார். பின்னர் 15 சதத்தில் இருந்து 25 சதமாக உயர்த்தப்பட்டபோது அவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்ற தலைப்பில் கொழும்பில் இருந்து தலைமன்னார்வரை புகையிரதத்தில் சென்று தாயகம் திரும்பும் மக்களின் வாழ்க்கை மற்றும் சிரமங்களை எழுதினார்.
 
இந்தத் தொடரை சரித்திரம் திரும்புகிறது என்ற தலைப்பில் எஸ்.விஸ்வரட்னம் (விஸ்வம்) தலைமன்னாரில் இருந்து ராமானுஜம் கப்பல் மூலம் ராமேஸ்வரம்வரை சென்று தொடர்ந்தார். இந்தக் கட்டுரைகள் வீரகேசரியின் மற்றுமொரு விற்பனைச் சரிவை தடுத்து நிறுத்தியது.
 
எஸ்.எம்.கார்மேகம், வீரகேசரியில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். அழைக்காதே, நெருங்காதே, தந்தையின் காதலி, அற்புத டாக்டர் போன்ற தொடர்கதைகளையும், சிறுகதைகளையும் எழுதினார். இவை வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தன. அவற்றைப் புத்தகமாக அவர் வெளியிட்டிருந்தால் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
 
இவரது எழுத்திற்கு ஆக்கமும்,ஊக்கமும் தந்தவர்கள் என்று சு.வேலுப்பிள்ளை (சு.வே) சொக்கன் ஆகிய தமது இரு தமிழாசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வார். இவர்கள் தந்த உற்சாகத்தால் பல கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றதாகவும், தனது உயர்வுக்கு காரணம் என்றும் பல தடவைகள் என்னிடம்
 
இவரது முயற்சியின் விளைவாகத்தான் வீரகேசரியின் ஆதரவுடன் மலையக சிறுகதைப் போட்டிகள் பல நடந்தன. கதைகளைத் தொகுத்து கதைக் கனிகள் என்ற தொகுதியாக வெளியிட்டார். அப் புத்தகத்தை அச்சிட்டுக் கொடுத்த செலவிற்காக இவரது இரண்டு மாத சம்பளத்தைப் பிடித்துக் கொண்டது தனிக் கதை.
 
திடீரென்று ஒருநாள் என்னிடம் அவர், தான் தமிழ்நாட்டில் குடியேறப் போவதாகச் சொன்னபோது திடுக்கிட்டுப் போவதாகச் சொன்னபோது திடுக்கிட்டுப் போனேன். ஏன் இந்த முடிவு என்று கேட்டதற்கு உலகம் பரந்தது. உலகெங்கும் தமிழர்கள் பரவுகிறார்கள். நம்மிடம் உள்ளது உழைப்பு ஒன்றுதான். அந்த உழைப்பிற்கு எங்கெல்லாம் கூலி கிடைக்குமோ, அங்கெல்லாம் நாம், நமது உழைப்பை விற்பதுதான் முறை என்று விளக்கம் தந்தார். அன்றைக்கு அவரது முடிவு எங்களுக்கு உடன்பாடில்லைதான்.
 
தமிழ்கூறு நல்லுலகில் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் கார்மேகமும் ஒருவர். இவரது ஆற்றலை நன்கறிந்த தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது.
 
ஒரு காலத்தில் இலங்கை பத்திரிகைகளுக்கு தமிழ்நாட்டில் இருந்துதான் ஆசிரியர்கள் வந்து கொண்டிருந்தனர். ஆனால் தினமணியில் எஸ்.எம்.கார்மேகத்தின் பிரவேசம் வரலாற்றைத் திசை திருப்பியது. இந்தியாவில் இலட்சக்கணக்கான பத்திரிகைகள் விற்பனையாகும் தினமணிக்கு, இலங்கையில் இருந்து கார்மேகம் சென்று இணைந்து கொண்டது வரலாற்றின் திருப்புமுனையாகும்.
 
1988ம் ஆண்டு இவர் தினமணியில் எந்தவிதச் சிரமமும் இன்றிச் சேர்ந்தார். அங்கும் சுமார் 3௦௦ பட்டதாரிகள் மத்தியில் தேர்வு நடத்தி, மூவரைத் தெரிவு செய்திருந்தார்கள். அவர்களில் கார்மேகமும் ஒருவர்.
 
எடுத்த எடுப்பிலேயே இவர் ஆசிரியராக சேர்த்துக் கொள்ளப்பட்டதை அங்கு காலம் காலமாக பணி செய்தவர்கள் எதிர்த்தார்களாம். ஆனாலும் அது எடுபடவில்லை. இவரது ஆற்றலை தினமணி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. படிப்படியாக பல பதவி உயர்வுகள் இவரை வந்தடைந்தன.
 
வாரப் பதிப்புகளின் ஆசிரியர் பொறுப்பில் இவரை அமர்த்தி தினமணி கௌரவித்தது. இவரது பொறுப்பில் தினமணிச் சுடர், தினமணிக் கதிர், வணிகமணி, வேளாண்மணி என்று பல வாரப் பதிப்புகள் தினமணியில் இணைப்பாக வெளிவந்தன.
 
புகழ் பூத்த எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களுமான சாவி, நா.பார்த்தசாரதி போன்ற பழம்பெரும் எழுத்தாளர்கள் அலங்கரித்த ஆசனத்தில் கார்மேகம் வீற்றிருந்து பணியாற்றினார்.
 
அதிலும் சிறப்பு என்னவெனில் சாவி, நா.பார்த்தசாரதி இருவரும் தினமணிக் கதிருக்கு தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்கள். ஆனால் கார்மேகத்தின் பொறுப்பில் பல வாரப் பதிப்புகள். தினமணி ஆசிரியருக்கு அடுத்த நிலையில், அவரது வலது கரமாக கார்வண்ணன் பணிபுரிந்து வந்தார்.
 
 
இந்திய பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அவருக்குச் சிறப்பான அங்கீகாரம் இருந்தது. சென்னை பத்திரிகையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளராக இருந்த இவர், பாண்டிச்சேரியில் நடந்த, அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தென் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் அப் பதவிக்கு வெற்றி பெற்றது முதல்றை மட்டுமல்ல, வரலாற்றுச் சாதனையும்கூட. ஆந்திரம், கர்நாடகம், கேரளம்,கேவா,பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் இப் பதவிக்குப் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மாநாட்டிற்கு இலங்கையில் இருந்தும் முன்னணிப் பத்திரிகையாளர்களான பி.எச்.எஸ்.ஜெயவர்த்தனா (முன்னாள் டெய்லி நியூஸ் பத்திரிகை ஆசிரியர், இலங்கை பத்திரிகையாளர் சங்கச் செயலாளர்), ஏ.எப்.காரியகரவன (லேக் அவுஸ் நிர்வாக ஆலோசகர், சிலுமின பிரதி ஆசிரியர்), கமகே, திவயின பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் செய்தி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 
எஸ்.எம்.கார்மேகம், சங்கச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டர் என்று அறிவிக்கப்பட்டதும், மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்திருந்த இவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கரகோசம் செய்து வரவேற்றனர்.
 
ஏனெனில் . . . . . . .
 
அப் பதவியின் பெருமை அவர்களுக்குப் புரியும்
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._கார்மேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது