மு. க. முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
not hits;
வரிசை 1:
'''மு.க.முத்து''' [[தி. மு. க]] தலைவர் [[மு.கருணாநிதி]]யின் மூத்த மகன். [[மு.கருணாநிதி]]யின் மூத்த மனைவி பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புமணியாக இதைக் கருதிய [[ம. கோ. இராமச்சந்திரன்| எம்.ஜி.ஆர்.]] [[திமுக]]விலிருந்து பிரிந்து [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]]மெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு<ref>[http://sangam.org/taraki/articles/2006/06-10_Karunanadhi.php?uid=1789 "In early 1970s, while being the Chief Minister, Karunanidhi aimed to promote his son M.K.Muthu against MGR in the movie arena to check MGR’s influence among the party cadres. That step cost him a lot." Quo Vadis Karunanidhi? by Sachi Sri Kantha]</ref>
 
''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன்]]'', ''[[அணையாவிளக்கு]]'' என்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப் பட்டவை.
 
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்துள்ளார். [[பவித்ரன்]] இயக்கத்தில் வளர்ந்து வரும் ''மாட்டு தாவணி'' என்ற திரைப்படத்துக்காக [[தேவா]] இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/மு._க._முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது