உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, என் மறுமொழிகள்
வரிசை 4:
 
பாலாஜி. 19 அக்டோபர் 2006
 
தமிழ் விக்கிபீடியா கட்டுரை எண்ணிக்கை குறித்த ஆய்வை அறிய பார்க்கவும் - [[Wikipedia:தமிழ் விக்கிபீடியா தர கண்காணிப்பு]], [[Wikipedia:தமிழ் விக்கிபீடியா புள்ளிவிபரங்கள் - பகுப்பாய்வு (ஆக. 2006)]]. இவ்வாய்வுகளை படித்தால், தமிழ் விக்கிபீடியா சரியான திசையிலும் வேகத்திலும் செல்கிறது என்று அறியலாம்.
 
தமிழ் விக்கிமூலம் குறித்த உங்கள் கருத்தை தவறாக எடுக்க ஒன்றும் இல்லை. உங்கள் கருத்து கவனிக்கத்தக்கது. மதுரைத் திட்டம் அனைவரும் அறிந்ததே என்றாலும் அதில் பல குறைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, அது திறந்த முயற்சி இல்லை. அனைத்து தமிழ் நூல்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஒரு தலைவரின் கீழே செயல்பட வேண்டி இருக்கிறது. பங்காளிப்பாளர்கிடையே திறந்த ஒருங்கிணைப்பு இல்லை. என்னை பொறுத்தவரை, அந்த திட்டத்தின் execution modelஐ விட விக்கிமூலத்தின் விக்கி வழிமுறை நீண்ட கால நோக்கில் வெற்றி பெறத் தக்கதும் அதிக பயன் தரத்தக்கதும் ஆகும். மதுரைத் திட்டத்தில் உள்ள நூட்களை விக்கிமூலத்தில் சேர்ப்பதற்கு அதிக நேரம் ஆகாது. அதை தானியக்கம்மாக கூடச் செய்யலாம்.
 
ஏற்கனவே இங்கு பங்களிப்பவர்களின் தமிழார்வத்துக்கு நீங்கள் தந்த பாராட்டுக்கு மகிழ்ச்சி. நீங்களும் இணைந்து பங்காற்ற வந்திருப்பதற்கு மகிழ்ச்சி. user:Gbalaji82 நீங்கள் தான் என்றால் தெரியப்படுத்தவும்.
 
தமிழ் விக்கிபீடியா முதற்பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வடிவமைப்பு மாற்றப்பட்டு வருகிறது. உங்கள் கருத்துக்கள் நிச்சயம் பயனுள்ளவை. ஆங்கில விக்கிபீடியா பற்றிய விழிப்புணர்வு அளவுக்கு, தமிழ் சமூகத்தில் விக்கிபீடியா பற்றிய விழிப்புணர்வு இல்லை.எனவே ஓரளவாவது விரிவான அறிமுகம் முதற்பக்கத்தில் தேவை. மேலதிக கருத்துக்களை முதற்பக்க பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கிறேன். --[[பயனர்:Ravidreams|ரவி]] 08:15, 20 அக்டோபர் 2006 (UTC)
 
== விக்கிபீடியா முதற் பக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாலாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது