பெத்லகேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 73:
[[இயேசு]] உண்மையிலேயே பெத்லகேமில்தான் பிறந்தாரா என்பதை நிறுவ போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான விவிலிய அறிஞர்கள் பெத்லகேமே [[இயேசு|இயேசுவின்]] பிறப்பிடம் என்று நிறுவியுள்ளனர். இதற்கான சான்றுகள் [[மத்தேயு]], [[லூக்கா]] நற்செய்திகள் தவிர, வேறு பல பழங்காலக் கிறித்தவ எழுத்தாளர்களின் கூற்றுக்களிலிருந்தும் தெரிகின்றன.
 
==தமிழ் இலக்கியத்தில் பெத்லகேம்==
 
[[வேதநாயகம் சாஸ்திரியார்]] என்னும் தமிழ்க் கிறித்தவப் புலவர் (1774-1864) '''பெத்லகேம் குறவஞ்சி''' என்னும் சிற்றிலக்கியம் படைத்து பெத்லகேமுக்குத் தமிழிலக்கியத்தில் அழியா இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். இக்குறவஞ்சி இலக்கியம் நாடகப் பாங்கான கதை அமைப்புடையது. இதை இயற்றிய சாஸ்திரியார் தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப் புலவராக இருந்தார்.
மேலும் காண்க: [[இயேசு பிறப்புக் கோவில்]]
 
பெத்லகேம் குறவஞ்சியில் ''இறைவாழ்த்து'', ''இயேசுவின் உலா'', ''தேவமோகினி காதல்'', ''குறத்தி கூறல்'', ''சிங்கன் வருகை'' என்று 5 பகுதிகள் உள்ளன. இதன் கதையமைப்பு பின்வருமாறு:
 
முதலில் கட்டியங்காரனாக திருமுழுக்கு யோவான் வருகிறார். அவரே [[இயேசு]] உலா வரப்போகிறார் என்னும் செய்தியை அறிவிக்கிறார்; [[இயேசு|இயேசுவின்]] பெருமைகளை எடுத்தோதுகிறார். உலா வரும் இயேசுவை வரவேற்க எருசலேம் நகரே விழாக் கோலம் பூணுகிறது. நகர மாந்தர்களும் வானதூதர்களும் திருச்சபை மகளிரும் திரளாகக் கூடிவருகின்றனர். இயேசு மாட்சிமையோடு உலா வருகின்றார்.
 
உலா வரும் [[இயேசு|இயேசுவைப்]] பார்க்கும் அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர். மக்கள் இலைக் கொத்துகளை அசைத்து "ஓசன்னா" என்று கூறி ஆர்ப்பரிக்கின்றனர்.
 
சீயோன் மகள் என்னும் தேவ மோகினி (திருச்சபையின் உருவகம்) இயேசுவைக் கண்டதும் காதல் கொள்கிறாள். அழகும் இறைபக்தியும் கருணையும் நிறைந்த அப்பெண் படுகின்ற இன்ப வேதனையை சாஸ்திரியார் சிறப்புற விவரிக்கின்றார்.
 
உலா வந்த [[இயேசு|இயேசுவைக்]] கண்டதும் நெஞ்சைப் பறிகொடுத்தத சீயோன் மகள் ([[திருச்சபை]]) அவரை நினைத்து ஏங்கித் தவிக்கின்றாள். இவ்வேளையில் (விசுவாச) குறத்தி (சிங்கி) வருகிறாள். இடுப்பில் கூடையும் சிங்கார நடையுமாக வந்த குறத்தியை அழைத்து, தலைவி குறிசொல்லக் கேட்கின்றாள். குறத்தியும் தன் நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் மலை வளத்தையும் எடுத்துக் கூறும் போது [[விவிலியம்|விவிலியச்]] செய்திகளையும், இயேசுவின் பெருமையையும் அவர் புரிந்த அருஞ்செயல்களையும் [[கிறித்தவம்|கிறித்தவரின்]] மேன்மைகளையும் கூடவே இணைத்துக் கூறுகிறாள்.
 
இயேசுவின் வியத்தகு பெருமைகளைக் குறத்தி கூறக் கேட்ட தலைவியை நாணம் மேற்கொள்ளவே அவள் முகம் சிவந்து விழி தாழ்க்கின்றாள். தலைவியின் கையைப் பார்த்துக் குறிசொல்லும் குறத்தி "பெத்லகேம் நாதர் (பெத்தலை நாதர் = இயேசு) உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும்" என்று குறி கூறுகிறாள். தலைவியும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகின்றாள். நன்றிநிறை உள்ளத்தோடு சிங்கிக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளிக்கின்றாள்.
 
இதைத் தொடர்ந்து (ஞான) சிங்கன் பெத்லகேம் நாதராம் இயேசுவைப் பாடிக்கொண்டே வருகின்றான். அந்த இயேசுவிடம் ஒரு "ஞான வலை" இருக்கிறது என்றும், ஆசையெனும் வலையில் சிக்கித்தவிக்கும் மனிதரை மீட்டெடுப்பது அந்த ஞான வலையே என்றும் பாடுகின்றான். பின் அவன் சிங்கியைச் சந்திக்கின்றான். "இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் எங்கே நீ சென்றனை சிங்கி?" என்று அவன் கேட்க, சிங்கி பதிலாக, "பெத்தலேகம் நகர் சீயோன் குமாரிக்குப் பத்திக்குறி சொலச் சிங்கா" என்று கூறுகின்றாள்.
 
கதைத் தலைவியாம் சீயோன் மகளிடமிருந்து பெற்ற அணிகளையெல்லாம் சிங்காரமாக உடலில் சாத்தியிருந்த குறத்தியிடம் சிங்கன் அவை எங்கிருந்து வந்தனவென்று வினவுகிறான். அதற்குச் சிங்கியும் நயமாகப் பதிலளிக்கின்றாள்.
 
பின்னர் சிங்கனும் சிங்கியும் கடவுளைப் போற்றுகின்றனர். இறுதி வாழ்த்தோடு ''பெத்லகேம் குறவஞ்சி'' நிறைவு பெறுகிறது.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/a071/a0714/html/a07143l2.htm வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய ''பெத்லகேம் குறவஞ்சி'']</ref>. இக்குறவஞ்சி வழியாக வேதநாயகம் சாஸ்திரியார் கிறித்தவ சமயக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடும், மக்கள் பண்பாட்டோடு இயைந்த விதத்திலும் எடுத்துக் கூறியுள்ளார்.
 
 
பெத்லகேம் பற்றி மேலும் காண்க: [[இயேசு பிறப்புக் கோவில்]]
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது