மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
* சேந்தன் - இந்தப் புலவர் கூத்தனாரின் தந்தை. சேந்தன் என்னும் பெயர் சேயோனாகிய முருகனைக் குறிக்கும்.
==அகநானூறு 102 சொல்லும் செய்தி==
இரவில் தலைவிக்காகத் தலைவன் காத்திருக்கிறான். அதனை அறியாதவள் போலத் தலைவி சோழியிடம் சொல்கிறாள்.
 
நாடன் நேற்று வந்தான். இன்று என்ன ஆனான் என்று தெரியவில்லை. ஊர் அலர் தூற்றுகிறது. என் நெற்றி அவனை நினைத்துப் பசந்து கிடக்கிறது. இது என்ன ஆகுமோ தெரியவில்லை - என்கிறாள்.
 
கானவன் உளைமானைப் போல வலிமை படைத்தவன். தினைக்காவலுக்கு வந்தவன் நன்றாகக் குடித்துவிட்டுக் கழுது என்னும் பரண்மேல் கிடக்கிறான்.
 
கொடிச்சி தன் கூந்தலை சந்தனப் புகையில் உலர்த்திக்கொண்டு குறிஞ்சிப்பண் பாடுகிறாள். அதனைக் கானவனும் கேட்கவில்லை. தினையை மேயாமல் உறங்கும் யானையும் கேட்டபாடில்லை. இப்படிப்பட்ட நாட்டுத் தலைவன்தான் இந்தப் பாடலின் தலைவன்.
 
==அகநானூறு 348 சொல்லும் செய்தி==
நாடனைத் தேறிய என் நெஞ்சம் இனி என்ன ஆகும்? என்று தலைவி தோழியை வினவுகிறாள்.