நோர்வே மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''நோர்வே மொழி''' அல்லது '''நோர்வேஜிய மொழி''' அல்லது '''நோர்வேசிய மொழி''' அல்லது '''நொர்ஸ்க்''' மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. [[நோர்வே]]யில் வாழும் கிட்டத்தட்ட 4.8 மில்லியன் மக்களும், நோர்வேயிலிருந்து முன்னைய நாளில் [[அமெரிக்கா]]வில் குடியேறி அங்கே வாழ்ந்துவரும் மக்களும், அவரது [[சந்ததி]]யினருமாகிய கிட்டத்தட்ட 50,000 மக்களும், [[கனடா]]விற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கிட்டத்தட்ட 7,700 மக்களும் இந்த [[மொழி]]யைப் பேசுகின்றவர்களாய் உள்ளனர்.<br />
 
நோர்வே மொழியில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட [[ஆட்சி மொழி]] வடிவங்களாக [[பூக்மோல் மொழி|பூக்மோல்]] (Bokmål), [[நீநொர்ஸ்க் மொழி|நீநொர்ஸ்க்]] (Nynorsk) என்னும் இருவேறு எழுத்து மொழி வடிவங்கள் உள்ளன. இவ்விரு மொழி வடிவங்களுமே நோர்வேயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
*'''பூக்மோல்''' (Bokmål - நேரடி மொழிபெயர்ப்பு '[[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்]] மொழி')- நோர்வே நாடு [[டென்மார்க்]] நாட்டுடன் இணைந்து இருந்த காலத்தில் [[டேனிய மொழி]]யை தழுவி உருவானது இந்த மொழி வடிவம். பழமையைப் பாதுக்காக்கும் மொழியாகவும் கொள்ளப்படுகின்றது.
*'''நீநொர்ஸ்க்''' (Nynorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'புதிய நோர்வே மொழி')- இது 19 ஆம் நூற்றாண்டில் நோர்வேயில் பயன்பாட்டில் இருந்த டேனிய மொழிக்கு ஒரு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி வடிவமே ஆகும். இது அதிகளவில் மேற்கு நோர்வேயில் பயன்பாட்டில் உள்ளது.
இவை தவிர அரசாங்க கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாத வேறு இரு எழுத்து மொழி வடிவங்களும் உள்ளன. அவையாவன:
*'''றிக்ஸ்மோல்''' (Riksmål - நேரடி மொழிபெயர்ப்பு 'தேசிய மொழி') - இது அதிகளவு பூக்மோலை ஒத்திருப்பதுடன் ஓரளவுக்கு டேனிய மொழியுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.
*'''ஹோய்க்நொர்ஸ்க்'''(Høgnorsk - நேரடி மொழிபெயர்ப்பு 'உயர் நோர்வே மொழி') - இது நீநொர்ஸ்க்கின் துய்மையான வடிமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து செய்யப்பட்ட அநேகமான எழுத்துச் சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளதுடன், பரந்தளவிலான பாவனையற்றும் உள்ளது.
 
==அரிச்சுவடி==
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது