திருநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 12:
 
==யூத சமயமும் திருநாடும்==
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] முதல் ஐந்து நூல்களாகிய "தனாக்" (Tanakh) என்னும் பகுதியில் "திருநாடு" என்னும் பெயர் இல்லை. ஆனால், கடவுள் [[இசுரயேல்|இசுரயேலுக்கு]] ஒரு நாட்டை "வாக்களித்தார்" என்னும் கூற்று [[விவிலியம்|விவிலியத்தில்]] பல இடங்களில் உள்ளது. இசுரயேலின் பழங்கால நகரங்கள் "திரு நகரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற நான்கு "திரு நகரங்கள்" [[எருசலேம்]], [[எபிரோன்]], [[சாபத்]], [[திபேரியா]] என்பவை ஆகும். இவற்றுள் [[எருசலேம்|எருசலேமில்]] கோவில் அமைந்திருந்ததால் அது யூத சமயத்தின் புனித மையமாயிற்று.
 
எபிரேய விவிலியத்தில் [[எருசலேம்]] 669 தடவை குறிக்கப்படுகிறது. அங்கே [[சீயோன்]] என்னும் சொல்லும் எருசலேமைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சில சமயங்களில் [[இசுரயேல்]] நாட்டையும் குறிக்கும். சீயோன் என்னும் சொல் எபிரேய விவிலியத்தில் 154 தடவை வருகிறது. [[தொடக்க நூல்|தொடக்க நூலில்]] [[மோரியா]] என்னும் பெயருள்ள மலைக்கு ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு பலிசெலுத்தச் சென்றார் என்னும் செய்தி உள்ளது (தொநூ 22). அம்மலைதான் பிற்காலத்தில் எருசலேமில் "கோவில் மலை" என்று அழைக்கப்பட்டது என்பர்.
 
எபிரேய விவிலியத்தில் எருசலேமும் [[இசுரயேல்]] நாடும் மக்களுக்குக் கடவுளால் அளிக்கப்பட்ட கொடை எனவும் கடவுள் மக்களோடு செய்துகொண்ட பல [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கைகளின்]] பகுதி என்றும் உள்ளது.
 
யூத மக்களின் நினைவில் எருசலேம் என்றால் புனித இடம் என்னும் உணர்வு ஆழப் பதிந்துள்ளது. தாவீது மன்னர் கடவுளுக்கு எருசலேமில் ஒரு கோவில் கட்ட முயன்றதும் மக்கள் உணர்வில் நிலைத்தது. இக்கருத்து [[1 சாமுவேல் (நூல்)|சாமுவேல் நூல்களிலும்]] [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] நூலிலும் சிறப்பாகத் துலங்குகின்றது. எருசலேம் பற்றிய தாவீதின் ஏக்கங்கள் பலவும் பல இறைவேண்டல்களிலும், பொதுமக்கள் பாடல்களிலும் இணைக்கப்பட்டுள்ளன். யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவின்போது அவர்கள் "அடுத்த ஆண்டு எருசலேமில் சந்திப்போம்" என்று கூறிப் பிரியாவிடை பெற்றுக்கொள்வார்களாம். எருசலேமை நோக்கி யூதர் இறைவேண்டல் செய்வது மரபு. "அழுகைச் சுவர்" (Wailing Wall) என்று அழைக்கப்படுகின்ற "மேற்குச் சுவர்" (Western Wall) என்பது பல நூற்றாண்டுகளாக யூதர்களின் திருப்பயணத் தலமாக விளங்கிவந்துள்ளது. இதுவும் "கோவில் மலையும்" யூதர்களின் மிகப் புனித தலங்களாகப் பல நூற்றாண்டுகள் கருதப்பட்டு வந்துள்ளன.
 
==கிறித்தவ சமயமும் திருநாடும்==
"https://ta.wikipedia.org/wiki/திருநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது