திருநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி சேர்க்கை
வரிசை 21:
 
==கிறித்தவ சமயமும் திருநாடும்==
கிறித்தவர்களின் பார்வையில் '''திருநாடு''' என்னும் கருத்து ஆபிரகாமோடு தொடங்குகிறது.
{{cquote|ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, 'எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர், இத்தியர், பெரிசியர், இரபாவியர், எமோரியர், கனானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்' என்றார். (தொநூ 15:18-21).}}
 
[[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாடு "இசுரயேல் நாடு" என்று அழைக்கப்படுகிறது:
{{cquote|ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குத் தோன்றி, 'நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இசுரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்' என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிகொண்டு இசுரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார் (மத் 2:19-21).}}
 
திருநாடு என்னும் கருத்து நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல, மாறாக நிலப்பரப்போடு இறையியல் கருத்தும் இணைந்துதான் திருநாடு உருவாகிறது.
 
குறிப்பாக, [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை நூலில்]] திருநாடு என்னும் கருத்து முதன்மையாக உள்ளது. அங்கே கடவுளின் "புனித" மக்கள் குடியேறினார்கள். [[யோசுவா (நூல்)|யோசுவா நூலின்]] கடைசிப் பகுதியில் நாட்டின் பகுதிகள் இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி உள்ளது. இவ்வாறு, கடவுள் முன்னோருக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுகிறது. அவர்கள் பெற்றுக்கொண்ட நாடும் "திருநாடாக" மாறுகிறது.
 
கிறித்தவர்கள் [[இயேசு|இயேசு கிறித்துவை]] உலக மீட்பராகவும், மெசியாகவும் கடவுளின் மகனாகவும் ஏற்கின்றனர். எனவே [[இயேசு]] பிறந்த இடம், அவர் பணி செய்த இடங்கள், அவர் துன்பங்கள் பட்டு சிலுவையில் அறையுண்ட இடம், அவரது கல்லறை இருந்த இடம், அவர் உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய இடங்கள் போன்றவை ஒருவிதத்தில் "புனிதமடைந்த" இடங்களாக மாறுகின்றன. இந்த இடங்களெல்லாம் இருக்கின்ற நாடு "திருநாடு" என்று அழைக்கப்படுகிறது.
 
கிறித்தவர்கள் திருநாட்டில் கீழ்வரும் இடங்களை உள்ளடக்குவர்:
*[[எருசலேம்]]: இங்கு இயேசு மக்களுக் கற்பித்தார். தாம் துன்புற்று இறப்பதற்கு முந்திய இரவில் தம் சீடர்களோடு கடைசி இரா உணவை அங்கு அருந்தினார். தம் சீடரோடு உணவுண்ட போது அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து அவை தம் உடலும் இரத்தமுமாக உள்ளன என்று கூறி, அவர்தம் நினைவாக அச்செயலைத் தொடருமாறு தம் சீடரிடம் கூறினார். எருசலேமுக்கு அருகிலுள்ள கொல்கதா என்னும் குன்றில் (கல்வாரி) இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். இயேசுவின் உடல் வைக்கப்பட்ட கல்லறையின் மீது கட்டப்பட்ட "திருக்கல்லறைக் கோவில்" எருசலேமில் உள்ளது. மேலும் "அனைத்து நாடுகளுக்குமான கோவில்" அங்கு அமைந்துள்ளது. வேறு பல கிறித்தவ நிறுவனங்களும் எருசலேமில் உள்ளன.
*[[பெத்லகேம்]]: இங்குதான் [[இயேசு]] [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவுக்குக்]] குழந்தையாகப் பிறந்தார். "இயேசு பிறப்புக் கோவில்" இங்குள்ளது.
*[[நாசரேத்து]]: இயேசு வளர்ந்த ஊர். இங்கு பல திருத்தலங்கள் உள்ளன. "மங்கள வார்த்தைக் கோவில்" மற்றும் "மரியாவின் கிணறு" இங்கு இருக்கின்றன.
 
[[சிலுவைப் போர்|சிலுவைப் போர்கள்]] நிகழ்ந்த காலத்தில் கிறித்தவ திருப்பயணிகள் திருநாட்டுக்குச் சென்று அங்கு இறைவேண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எருசலேமையும் பிற புனித இடங்களையும் இசுலாமியரிடமிருந்து விடுவிப்பதும் அப்போர்களின் நோக்கமாயிருந்தது.
 
மேலே குறிப்பிட்ட இடங்கள் தவிர கிறித்தவர் புனிதமாகக் கருதும் தலங்கள் இவை:
*செப்போரியா (Sephoria): இங்கு இயேசுவின் தாய் மரியா தம் குழந்தைப் பருவத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.
*இயேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் ஆறு.
*திருமுழுக்கு யோவான் தங்கியிருந்ததாகக் கருதப்படும் பாறைக் குகை.
*இயேசு பணி புரிந்த பகுதியாகிய [[கலிலேயக் கடல்]].
*இயேசு தோற்றம் மாறிய தாபோர் மலை.
*[[நல்ல சமாரியன் உவமை|நல்ல சமாரியர் கதையோடு]] தொடர்புடைய [[எரிகோ]] நகரம்.
 
==இசுலாமும் திருநாடும்==
==பாஹாய் சமயமும் திருநாடும்==
"https://ta.wikipedia.org/wiki/திருநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது