3,901
தொகுப்புகள்
சி (சேர்க்கை) |
சி (திருத்தம்) |
||
கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கியாவில் நிலவிய கிறித்தவ சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்து அமைப்புப் பெற்ற குழுவாக விளங்கியது. கி.பி. சுமார் 35இலிருந்து 108 வரை வாழ்ந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch) கி.பி. 69இலிருந்தே அந்நகரின் ஆயராகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்குகின்ற பல நூல்களை ஆக்கினார்<ref>[http://en.wikipedia.org/wiki/Ignatius_of_Antioch புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்.]</ref>.
கி.பி. 4ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கிய திருச்சபை [[உரோமை]] மற்றும் [[
கான்ஸ்டாண்டிநோப்புள் நகரம் வளர்ந்து, [[எருசலேம்]] முது ஆயர் மையமாக மாறியபோது அந்தியோக்கியாவின் முதன்மை மங்கலாயிற்று. மேலும் கிறித்தவத்துக்குப் புறம்பான கொள்கைகள் அந்தியோக்கிய சபையில் நுழைந்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஆயினும் கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் அந்தியோக்கியா கிறித்தவ விவிலிய ஆய்வுக்குப் பெரும் உந்துதல் அளித்தது.
==அந்தியோக்கியாவில் கிறித்தவ இறையியல் வளர்ச்சி==
[[கிறித்தவ இறையியல்|கிறித்தவ இறையிலுக்கு]] அந்தியோக்கியா அளித்த பங்கு சிறப்பானது. [[
==அரபு ஆட்சிக் காலத்தில் அந்தியோக்கியா==
பண்டைக்கால உரோமையர் அந்தியோக்கியாவை எழில் மிகுந்த நகரமாகக் கட்டியெழுப்பியிருந்தார்கள். அவர்கள் எழுப்பிய கட்டடங்களுள் மிகச் சிலவே அழிபாடுகளுடன் எஞ்சியுள்ளன. நகரத்தைக் காப்பதற்காக எழுப்பப்பட்ட மதில்சுவர் எஞ்சியது. நகருக்குக் குடிநீர் கொண்டுசெல்ல அமைக்கப்பட்ட நீர்வழிகளும் (aqueducts) இன்று காணப்படுகின்றன. [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு கோவில்]] நீடித்துள்ளது. பழங்காலக் கிறித்தவர்கள் நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்துவதற்காகக் கூடிய குகைப்பகுதியில் இக்கோவில் எழுந்ததால் புனித பேதுரு குகைக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய உரோமை நகரான அந்தியோக்கியா பெருமளவும் ஒரோண்டெஸ் பேராற்றுப் படுகையின் கீழ் புதைந்து கிடக்கிறது; சில பகுதிகள் புதிய குடியேற்றங்கள் எழுவதன் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன.
1932-1939 ஆண்டுகளில் லூவர் காட்சியகம், பால்ட்டிமோர் கலைக் காட்சியகம், வூஸ்ட்டர் கலைக் காட்சியகம், ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகம், ஃபாக் கலைக் காட்சியகம் போன்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அகழ்வாய்வுகள் நிகழ்த்தின. காண்ஸ்டண்டைன் கட்டிய எண்கோண வடிவப் பெருங்கோவில், அரச அரண்மனை போன்ற இடங்கள் அகழ்வாய்வில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனாலும், பிற பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் கீழ்வருவன முக்கியமானவை: அந்தியோக்கியா, டாஃப்னீ, செலூக்கியா ஆகிய பண்டைய நகரங்களில் இருந்த விடுமுறை வீடுகளையும் பொதுக் குளிப்பகங்களையும் அணிசெய்த அழகிய கற்பதிகை ஓவியங்கள் (mosaics) கிடைத்துள்ளன. அந்தியோக்கியாவின் காவல் தெய்வமாகக் கருதப்பட்ட "டைக்கீ" (Tyche) என்னும் பெண் தெய்வத்தின் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டன. அழகிய "டைக்கீ" சிலையொன்று [[வத்திக்கான் நகர்|வத்திக்கான் நகரக்]] கலையகத்தில் காக்கப்பட்டு வருகிறது. அச்சிலையின் வலது கையில் [[கோதுமை|கோதுமைக் கதிர்]] உள்ளது; தலையில் நகரக் காப்புச் சுவர்கள் பதியப்பெற்ற மகுடம் விளங்குகிறது; சிலையின் காலடியில் ஒரோண்டஸ் பேராறு நீச்சலடிக்கின்ற ஓர் இளைஞன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தியோக்கு நகரம் உருவான காலத்தில் அது எப்போதும் நற்பேறு பெற்றுச் செழிப்போடு விளங்க வேண்டும் என்பதற்காக ஓர் இளம் கன்னிப்பெண் பலியாக்கப்பட்டார் என்றும் அதன் அடையாளமே "டைக்கீ" தெய்வச் சிலை என்றும் சில அறிஞர் கருதுகின்றனர்.
==ஆதாரங்கள்==
|