"அந்தியோக்கியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

423 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (திருத்தம்)
சி (திருத்தம்)
'''அந்தியோக்கியா''' (''Antioch'') என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Antioch அந்தியோக்கியா]</ref>. இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் அருகில்கரையில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.
 
பிற மொழிகளில் இந்நகரத்தின் பெயர்: கிரேக்கம்: Ἀντιόχεια ἡ ἐπὶ Δάφνῃ, Ἀντιόχεια ἡ ἐπὶ Ὀρόντου அல்லது Ἀντιόχεια ἡ Μεγάλη; இலத்தீன்: Antiochia ad Orontem; அரபி: انطاکیه (Antakya).
==உரோமை ஆட்சியின் கீழ் அந்தியோக்கியா==
 
கி.மு. 83இல் அந்தியோக்கியா அர்மீனிய ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால், கி.மு. 65இல் அந்தியோக்கிய மக்கள் [[உரோமைப் பேரரசு|உரோமையரை]] அணுகினர். [[உரோமைப் பேரரசு|உரோமை ஆட்சியின்]] போது அந்தியோக்கியஅந்தியோக்கியா "சுதந்திர நகர்" என்னும் நிலையில் தொடர்ந்தது. [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்கள்]] அந்தியோக்கியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை எகிப்திய [[அலெக்சாந்திரியா|அலெக்சாந்திரியாவை]] விடவும் மேலாக வளர்த்தெடுத்தனர். [[ஜூலியஸ் சீசர்]] கி.மு. 47இல் அந்தியோக்கியாவுக்குச் சென்று அது தொடர்ந்து "சுதந்திர நகர்" என்னும் நிலையில் நீடிக்கும் என்று உறுதியளித்தார். சில்ப்பியுஸ் குன்றத்தில் [[ஜூப்பிட்டர்|ஜூப்பிட்டர் கடவுளுக்கு]] மாபெரும் கோவில் கட்டப்பட்டது. உரோமைப் பாணியில் அமைந்த பொதுவெளி (forum) உருவாக்கப்பட்டது. [[திபேரியுஸ்]] மன்னரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூண்கள் வரிசை அமைந்த வழி சில்ப்பியுஸ் குன்றத்துக்கு இட்டுச்சென்றது. அக்ரிப்பா, திரயான், அந்தோனியுஸ் பீயுஸ், ஹேட்ரியன் போன்ற உரோமை மன்னர்கள் அந்தியோக்கியாவை அழகுபடுத்தியதோடு அங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டடங்களையும் உருவாக்கினர். அந்தியோக்கியாவில் கோம்மொதுஸ் மன்னன் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுகள்]] நிகழ்த்தினார். கி.பி. 256இல் [[பாரசீகம்|பாரசீகப் படைகள்]] அந்தியோக்கியவைத்அந்தியோக்கியாவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.
 
==கிறித்தவ வரலாற்றில் அந்தியோக்கியா==
[[கிறித்தவம்|கிறித்தவ சமயம்]] யூத நாட்டுக்கு வெளியே பரவத் தொடங்கிய காலத்தில் அந்தியோக்கியா மைய இடமாக அமைந்தது. அந்நகரில் யூத மக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த "கெரட்டேயோன்" (Kerateion) என்னும் பகுதி நகரின் தெற்குப்பகுதியில் இருந்தது. யூத மக்களிடையே [[கிறித்தவம்|கிறித்தவ சமயத்தைப்]] பரப்பும் வண்ணம் பல மறைபரப்பாளர் சென்றனர். இயேசுவின் சீடரான [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]] அங்கு போதித்தார். அதன் அடிப்படையில் இன்று அந்தியோக்கிய முதுவர் சபை தனக்கு முதன்மையிடம் உண்டு என்னும் கோரிக்கையை எழுப்புகிறது.
 
அந்தியோக்கியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய இரு பெரும் மறைபரப்பாளர்கள் [[பர்னபா]], [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] (பிறப்பு: கி.பி. சுமார் 5; இறப்பு: கி.பி. சுமார் 67) ஆவர். பவுல் இந்நகரத்தில் கி.பி. 47இலிருந்து 55 வரை மறைபரப்பினார்<ref>[http://en.wikipedia.org/wiki/Paul_the_Apostle புனித பவுல்.]</ref>. இந்த மறைபரப்பாளர் கிறித்தவத்தை போதித்தபோது மக்கள் கூடி வந்து நற்கருணைக் கொண்ட்டாட்டம்கொண்டாட்டம் நிகழ்த்திய குகைப் பகுதி இன்றும் உள்ளது.
[[Image:Antiochia Petrusgrotte.jpg|thumb|அந்தியோக்கியாவில் முதல் நூற்றாண்டில் [[கிறித்தவம்|கிறித்தவர்]] வழிபாட்டுக்குக் கூடிய குகைப்பகுதி (பேதுரு குகை).]]
இவ்வாறு அந்தியோக்கியா கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் முதன்மை வாய்ந்த இடமாக மாறிற்று. கிறித்தவத்தின் பிற மூன்று நகர மையங்கள் இவை: [[எருசலேம்]], [[அலெக்சாந்திரியா]], [[உரோமை]].
கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கியாவில் நிலவிய கிறித்தவ சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்து அமைப்புப் பெற்ற குழுவாக விளங்கியது. கி.பி. சுமார் 35இலிருந்து 108 வரை வாழ்ந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (Ignatius of Antioch) கி.பி. 69இலிருந்தே அந்நகரின் ஆயராகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்குகின்ற பல நூல்களை ஆக்கினார்<ref>[http://en.wikipedia.org/wiki/Ignatius_of_Antioch புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்.]</ref>.
 
கி.பி. 4ஆம் நூற்றாண்டளவில் அந்தியோக்கிய திருச்சபை [[உரோமை]] மற்றும் [[அலெக்சாந்திரியா]] ஆகிய நகர்களில் அமைந்த சபைகளைப் போல முதன்மை வாய்ந்ததாக விளங்கியது. அங்கு கலையழகு வாய்ந்த கிறித்தவப் பெருங்கோவில் ஒன்று கி.பி. 327-341இல் கட்டப்பட்டது. அதற்குக்உரோமைப் பேரரசர் காண்ஸ்டண்டைன் தொடங்கிய கோவில் கட்டடத்தை அவர்தம் மகன் காண்ஸ்தான்சியஸ் நிறைவுசெய்தார். அப்பெருங்கோவிலுக்குக் குவிமாடம் இருந்தது; கற்பதிகை முறையில் உருவாக்கிய பல கலைப்படைப்புகளும் அக்கோவிலில் இருந்தன.
 
கான்ஸ்டாண்டிநோப்புள் நகரம் வளர்ந்து, [[எருசலேம்]] முது ஆயர் மையமாக மாறியபோது அந்தியோக்கியாவின் முதன்மை மங்கலாயிற்று. மேலும் கிறித்தவத்துக்குப் புறம்பான கொள்கைகள் அந்தியோக்கிய சபையில் நுழைந்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஆயினும் கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் அந்தியோக்கியா கிறித்தவ விவிலிய ஆய்வுக்குப் பெரும் உந்துதல் அளித்தது.
 
உரோமைப் பேரரசன் ஜூலியன் கி.பி. 362இல் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஒரு புலம்பல் விழா நடந்துகொண்டிருந்தது. அதை ஜூலியன் விரும்பவில்லை. அதுபோலவே கிறித்தவர்களும் ஜுலியன் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக உணர்ந்தார்கள். யூதர்களின் சமயச் சடங்குகள் மற்றும் புராதன சமயச்சமயத்தின் சடங்குகள் ஆகியவற்றை ஆதரித்த ஜூலியன் அந்தியோக்கியாவில் இருந்த கிறித்தவப் பெருங்கோவிலை மூடியது கிறித்தவர் நடுவே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது தவிர, ஜூலியனின் இராணுவத்தினர் புராதன சமயத்தைச் சார்ந்த கோவிலில் பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு, மதுவருந்தி நகரத் தெருக்களில் தொந்தரவு கொடுத்தனர்; அதே நேரத்தில் நகர மக்கள் பசியால் வாடினர். எனவே மக்கள் ஜூலியனை வெறுத்தனர். அவரது தாடி பற்றிக் கேலிச் சித்திரங்களும் வெளியாயின.
 
526இல் நிகழ்ந்த பயங்கர [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தின்போது]] அந்தியோக்கியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. முதலாம் ஜஸ்டீனியன் மன்னன் அந்தியோக்கியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோக்கியாவைத் தாக்கியதோடு அங்கு வாழ்ந்த சுமார் 3 இலட்சம் மக்களைக் கொன்றார். அந்தியோக்கியாவின் புகழும் மங்கத் தொடங்கியது.
{{விவிலிய இடங்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/736654" இருந்து மீள்விக்கப்பட்டது