அ. மு. யூசுப் சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அ. மு. யூசுப் சாகிப்''' [[இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
==இதழியல் துறை==
1926ம் ஆண்டு இந்தியாவில் திருச்சியில் பிறந்த இவர் சிறு வயது முதலே இலக்கியத்திலும், இதழியலிலும் ஆர்வம் மிக்கவர். தனது 15வது வயதில் கதம்பம் என்ற கையெழுத்து இதழை நடத்தியுள்ளார். எஸ். எம். உமரும் இவரின் இக்கையெழுத்து இதழுக்கு ஒத்துழைப்பாக இருந்துள்ளார். பக்கர் என்பவரின் ஓவியங்கள் இவ்விதழை அலங்கரித்துள்ளன.
==முஸ்லிம் லீக் வார இதழ்==
1947ம் ஆண்டில் காரைக்காலில் 'முஸ்லிம் லீக்' எனும் பெயரில் வார இதழ் ஒன்றை இவர் தொடங்கியுள்ளார். இக்காலகட்டத்தில் இந்தியாவில் செய்தித் தணிக்கை காணப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களுக்கு உட்பட்டார். இத்தகைய இக்கட்டான நேரத்தில் இவரது நண்பர்கள் இவரை சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிற்காலத்தில் காரைக்காலுக்கு 'முஸ்லிம் லீக்' இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவராவார். ஆரம்பத்தில் சாதாரண தொண்டனாக முஸ்லிம் லீக்கில் இணைந்து 'தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொதுச் செயலாள'ராக வளர்ச்சியடைந்தார்.
==மலாய நண்பனில் பணி==
[[சிங்கப்பூர்]] சென்ற அ. மு. யூசுப் சாகிப் இக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் தமிழ் மொழியில் பிரபல்யம் பெற்றிருந்த [[மலாய நண்பன்]] ஆசிரியர் கரீம் கனியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._மு._யூசுப்_சாகிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது