அ. மு. யூசுப் சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==மலாய நண்பனில் பணி==
[[சிங்கப்பூர்]] சென்ற அ. மு. யூசுப் சாகிப் இக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் தமிழ் மொழியில் பிரபல்யம் பெற்றிருந்த [[மலாய நண்பன்]] ஆசிரியர் கரீம் கனியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
==மறுமலர்ச்சி==
சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பிய இவர் 1952ம் ஆண்டு [[மறுமலர்ச்சி (சிற்றிதழ்)| மறுமலர்ச்சி]] எனும் வாராந்த இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இசுலாமிய இதழ்களில் நீண்ட காலங்களாக வெளிவந்த இதழாகவும், சில காலங்கள் அதிக விற்பனையுள்ள சிற்றிதழாகவும் இது இருந்துள்ளது. மறுமலர்ச்சி 'இசுலாமியக் கலைக்களஞ்சியம்' எனும் நூலினையும் வெளியிட்டுள்ளது.
==பின்னணிக் குரல்==
சில திரைப்படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துமுள்ளார்.
==காலை இழந்தார்==
நீரிழிவு நோய் காரணமாக இவர் ஒரு காலை இழந்தார். இருப்பினும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். இச்சந்தர்ப்பத்தில் "கால் போனால் போகட்டுமே, பேனா பிடிக்க கை இருக்கின்றதே, தொடர்ந்து பணியாற்றுவேன்" எனக்கூறி தனது இதழியல் பணியைத் தொடர்ந்துள்ளார்.
==இறப்பு==
[[ஏப்ரல் 23]] [[1993]]ல் தனது 67வது வயதில் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._மு._யூசுப்_சாகிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது