ஆடுகளம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==கதைச் சுருக்கம்==
சேவல் சண்டையினை கதைக்கருவாக உள்ள இத்திரைப்படத்தில் சேவல் சண்டையில் ஜாம்பவனான பேட்டைக்காரனை ''(ஜெய பாலன்)'' அவரின் பரம போட்டியாளரான காவல்துறை அதிகாரி ரத்தினசாமி ''(நரேன்)'' ஒருமுறையாவது போட்டியில் வீழ்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பேட்டைக்காரனின் நம்பிக்கையான சிஷ்யனான கருப்பு ''(தனுஷ்)'' தான் மிகவும் அன்புடன் வளர்க்கும் சேவலை பந்தயத்தில் ரத்தின சாமிக்கு எதிராக களம் இறக்குகிறார். ஆனால் அவரின் குருவான பேட்டைக்காரனுக்கு இதில் சற்றும் உடன்பாடில்லை. அவர் அந்த சேவல் சண்டையிடத் தகுதியற்றது எனக் கூறி அதனை கொல்லச் சொல்கிறார். ஆனால் குருவின் எதிர்ப்பையும் மீறி களத்தில் இறங்குகிறார். எதிரணியினரின் சூழ்ச்சி ஆட்டத்தையும் மீறி வெற்றி பெற்று பரிசை வெல்கிறார். பரிசு தொகையினை தன் குரு பேட்டைக்காரனிடம் கொடுத்து வைத்திருக்கிறார். கருப்பின் காதலியான ஆங்கிலோ-இந்திய பெண் ஐரீனின் ''(டாப்ஸீ)'' தந்தை கருப்பிற்கு தொழில் ஏற்பாடு செய்து தருவதாக கூற, தான் பந்ந்தயத்தில் வென்ற பரிசு தொகையக் கேட்கிறார் கருப்பு. அப்போது பேட்டைகாரன் தன்னை வழிபறித்து பணத்தை திருடிவிட்டதாக கூறுகிறார். அதன் பின் நடக்கும் பரபரப்பான காட்சிகளும் திருப்பு முனைகளும்தான் கதையின் முடிவு.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆடுகளம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது