ஒத்துழையாமை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஒத்துழையாமை இயக்கம்''' (''Non-cooperation movement'') என்பது [[பிரித்தானிய இந்தியாவில்இந்தியா]]வில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய [[மக்கள் இயக்கம்|மக்கள் இயக்கமாகும்]]. இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. [[மகாத்மா காந்தி]]யாலும் [[இந்திய தேசிய காங்கிசுகாங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசாலும்]] முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
 
[[ரவ்லட் சட்டம்]] மற்றும் [[ஜாலியன் வாலாபாக் படுகொலை]]க்கு எதிராகக் குரல் கொடுக்கவும் [[இந்திய அரசுச் சட்டம், 1919|1919 இந்திய அரசு சட்டத்தில்]] இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை எற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிநர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசு போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தை காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஒத்துழையாமை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது