வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
இரண்டாம் உலகப் போருக்குப்பின், அதுவரை கடற்படைகளின் முதன்மைக் கப்பல்களாக இருந்து வந்த போர்க்கப்பல்களுக்கு பதில் வானூர்தி தாங்கிகள் முதன்மைக் கப்பல்களாகின. போர்க்களங்களில் வான்படைகளின் முக்கியத்துவம் அதிகமானதால் கடற்பகுதிகளில் [[வான் ஆளுமை]] பெற வானூர்தி தாங்கிகள் இன்றியமையாதவை ஆகி விட்டன. வானூர்திகளின் ரகங்களும், வலிமையும் கூடக் கூட அவற்றைத் தாங்கிச் செல்லும் தாங்கிகளின் எடையும் அளவும் அதிகரித்தன. தற்கால கடற்படைகளில் 75,000 டன்களுக்கு மேல் எடையுள்ள மீவானூர்தி தாங்கிகள் (Supercarriers) இடம் பெற்றுள்ளன. டீசல் அல்லது அணுஉலைப் பொறிகளால் உந்தப்படும் இவை ஒரு கடற்படை தன் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளிலும் செயல்பட உறுதுணையாக உள்ளன. வானூர்தி தாங்கிகளைத் தவிர, உலங்கு வானூர்தி தாங்கிகள் (Helicopter carriers), நீர்நில தாக்கு கப்பல்கள் (amphibious assault ships) போன்ற புதிய ரகங்களும் உருவாகியுள்ளன.
 
போர்க்கப்பல்களைப் போன்று வானூர்தி தாங்கிகளிடம் சுடுதிறன் இருப்பதில்லை. அவற்றில் மிகக் குறைவான அளவிலெயே பீரங்கி குழுமங்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு வானூர்தி தாங்கியால் தனியே எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் தாக்குதலை சமாளிக்க இயலாது. இதனால் வானூர்தி தாங்கிகள் எப்போதும் தனியே செயல்படுவதில்லை; பிற போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் சூழ ஒரு வானூர்தி தாங்கி குழுமமாகவே (Carrier group) செய்லபடுகின்றன. கடல் ஒப்பந்தகளால் வானூர்தி கப்பல்களின் எடையின் உச்சவரம்பு கட்டுப்பாடு இரண்டாம் உலகப் போருக்குப்பின் தளர்ந்ததால், புதிய வானூர்தி தாங்கி ரகங்களின் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கக் கடற்படையின் நிமிட்சு ரகம், ஃபோர்ட் ரகம் போன்றவை ஒரு லட்சம் டன்களுக்கு மேல் எடை கொண்டவையாக உள்ளன.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது