மாயத்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
[[கள்]], [[சாராயம்]], [[அபின்]], [[கஞ்சா]] போன்ற போதைப் பொருட்களை உடகொண்டு மயக்க உணர்ச்சிகளைத் தாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும். சில வகை மருந்துப் பொருட்களும் மயக்கம் தருகின்றன. இவை மனிதனது உடலில் வேதியல் மாற்றங்களை செய்து, கிளர்ச்சியடைய செய்கின்றது.
==உயிரியல் முறை==
உயிரிளின் உடல்வாகுக்கும் சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கும் [[குரோமசோம்]]கள் காரணமாகும். [[வைட்டமின்]], அல்லது நொதிகளின் பற்றாக்குறை காரணமாக குரோமசோம்களில் ஏற்படும் குறைப்பாடு மயக்க உணர்ச்சிகளைத் தரலாம். வைட்டமின் குறைபாடால் [[பெரி பெரி]], [[பொல்லாக்ரா]] போன்ற மனநோய்கள் உருவாகலாம், எண்டாக்கிரினல், [[பாராதைராய்டு]] போன்ற [[சுரப்பி]]களில் ஏற்படும் குறைபாடுகளாலும் மயக்க உணர்ச்சி தோன்றலாம். இத்தகைய குறைபாடுகள் கொண்டவர்கள் தூக்கத்தில் நடப்பவர்களாக, கற்பனை உலகில் வாழ்பவர்களாக, அதிகம் கனவு காண்பவர்களாக இருப்பார்கள்.
==உளவியல் முறை==
[[கதையாடல்]]கள், கற்பிதங்கள் வழியாக நம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஊட்டப்படும் உணர்வுகளுக்கு ஏற்ப உள்ளம் உருவாக்கம் பெறுகிறது. [[சமய உரை]]கள், புராணங்கள், இதிகாசங்கள், வழியாக தொடர்ந்து ஊட்டப்படும் கருத்துக்களும் பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துக்களும், குழந்தைப் பருவத்திலிருந்தே மனதில் திணிக்கப்படுகின்றன. பேயாட்டம், சாமியாட்டம், அயல் மொழிகளில் பேசுதல், ஒய்வின்றி மந்திரங்களைப் புலம்பிக் கொண்டே இருத்தல் போன்றவை கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளேயாகும். புரியாத மொழியில் பேசுவது குளோசோலாலிய (Clossolalia) என்னும் மனநோய் என்று கூறப்படுகிறது,
"https://ta.wikipedia.org/wiki/மாயத்தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது