மேலாட்சி அரசு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மேலாட்சி அரசு முறை''' (Dominion) ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
'''மேலாட்சி அரசு முறை''' (''Dominion'') என்பது பிரித்தானியப் பேரரசில் பேயரளவில் மட்டும் [[பிரிட்டன்|பிரித்தானிய]] முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழு தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை [[பிரித்தானியப் பேரரசு]] மற்றும் [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாயத்தின்]] பகுதியாகவே கருதப்பட்டன. [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] இறுதியில் பிரித்தானிய அரசு தனது ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த அந்தஸ்தை அளிக்கும் வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. [[கனடா]], [[ஆஸ்திரேலியா]], [[தென்னாப்பிரிக்க ஒன்றியம்]], [[ஐரிய விடுதலை அரசு]] போன்ற நாடுகள் ஒரு காலகட்டத்தில் மேலாட்சி அங்கீகாரம் பெற்றிருந்தன. 1948 க்குப் பின் ”மேலாட்சி முறை” என்பதன் பொருள் மாறுபடத்தொடங்கியது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[நாட்டுத் தலைவர்]], பிற நாடுகளின் நாட்டுத் தலைவராக இருந்தால், அந்நாடுகள் மேலாட்சிகளாகக் கருதப்பட்டன. [[பாகிஸ்தான்]], [[இலங்கை]], [[கென்யா]], [[ஜமைக்கா]], ஆஸ்திரேலியா, [[நியூசிலாந்து]], கனடா போன்றவை இந்த நிலையில் இருந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின் பிரித்தானிய பேரரசிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் காலனிகளின் [[அரசமைப்புச் சட்டம்|அரசமைப்புச் சட்டங்களில்]] அவை “மேலாட்சி”களாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலையடைந்து சில ஆண்டுகளுக்குப் பின் இவை, தங்களை குடியரசுகளாக மாற்றிக்கொண்டு “மேலாட்சி” முறையினைக் கைவிட்டன. (எ.கா) ஆகஸ்ட் 15, 1947 அன்று விடுதலை பெற்ற இந்தியா [[குடியரசு நாள் (இந்தியா)|ஜனவரி 26, 1950]] அன்று குடியரசானது. இந்த இடைப்பட்ட காலத்தில் [[இந்திய மேலாட்சி அரசு]] (''Dominion of India'') என்றே அறியப்பட்டது.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/741296" இருந்து மீள்விக்கப்பட்டது