"எலிக்கோபேக்டர் பைலோரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: ro:Helicobacter pylori; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: ro:Helicobacter pylori; cosmetic changes)
MeshID = D016481 |
}}
'''ஹெலிகோபேக்டர் பைலோரி''' ('''''Helicobacter pylori''''')ஒரு [[கிராம் சாயம்|கிராம் சாயமேற்காத]], நகரும் தன்மையுள்ள நீண்ட சுருள் வடிவுள்ள [[பாக்டீரியா]] ஆகும். இது மனித [[இரைப்பை]]த் திசுவில் மட்டுமே வாழக் கூடியது. தற்போது இது [[வயிற்றுப் புண்|இரைப்பைக் குடற்புண்]] இரைப்பைப் புற்று நோய் ஆகியவற்றை உண்டாக்குவதாகத் தெரியவந்துள்ளது.
 
முதன் முதலில் இது பார்க்க கேம்பைலோபேக்டர் போல இருந்ததால் காம்பைலோபேக்டர் பைலோரி என அழைக்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிகள் மூலம் இது காம்பைலோபேக்டர் அன்று என்று கண்டுபிடிக்கப்பட்டு ஹெலிகோபேக்டர் பைலோரி எனப் பெயர் பெற்றது. பரவலாக இது எச்.பைலோரி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
 
== பெயர்க்காரணம் ==
 
== நுண்ணுயிரியல் ==
[[Imageபடிமம்:Helicobacter pylori.jpg|left|300pxl|thumb|எலக்ட்ரான் நுண்ணோக்கியில் தெரியும் எச்.பைலோரி']]
எச்.பைலோரி, திருகுசுருள் வடிவமுடையது;கிராம் சாயம் ஏற்காதது; 3 [[மைக்ரான்]] நீளமும் அரை மைக்ரான் அகலமும் உடையது; நகர உதவும் கசையிழைகள் நான்கு முதல் ஆறு வரை கொண்டது. குறைந்த அளவு உயிர்வளியாவது இது உயிர்வாழ அவசியம். இது பல்வேறு [[நொதி]]களை உற்பத்தி செய்கிறது. அவற்றுள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது யூரியேஸ் எனும் [[யூரியா]]வைச் சிதைக்கும் நொதி ஆகும்.
 
== நோய்த்தோற்றவியல் ==
[[Imageபடிமம்:Helicobacter Pylori Urease.png|thumb|யூரியேஸ் நொதியின் மூலக்கூறு அமைப்பு]]
மனித இரைப்பையில் சுரக்கப்படும் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் பிற ஊறு விளைவிக்கும் பாக்டீரியங்களை அழிக்கும் தன்மை உடையது. ஆனால் இதிலிருந்தும் தப்பும் வழிகளைக் கையாள்வதன் மூலம் எச்.பைலோரி மட்டும் இங்கே வாழ முடிகிறது. தனது [[கசையிழை]]களைக் கொண்டு இது அமிலச்செறிவற்ற [[கோழை]]ப்படலத்தைத் துளையிட்டு உள்ளே சென்று வசிக்கிறது. ஒட்டும் தன்மையுள்ள பொருட்களைச் சுரந்து இரைப்பையின் புறஅடுக்குச் செல்களோடு நன்கு ஒட்டிக் கொள்கிறது.
எச்.பைலோரி அதிக அளவில் யூரியேஸ் நொதியைச் சுரக்கிறது. இந்நொதி யூரியாவை உடைத்து [[அம்மோனியா]]வாகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் மாற்றுகின்றன. அம்மோனியா நீருடன் இணையும் போது அம்மோனியம் அயனியாக மாறுகிறது. எஞ்சிய ஹைட்ராக்சைல் அயனி கரியமில வாயுவுடன் இணைந்து பைகார்பனேட் அயனி உண்டாகிறது. இது இரைப்பையின் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை நடுநிலையாக்கி விடுகிறது. ஆகவே எச்.பைலோரி உயிர்வாழ யூரியேஸ் நொதி இன்றியமையாத ஒன்றாகும்.
யூரியேஸ் நொதியால் உருவாகும் அம்மோனியா புறஅடுக்கு செல்களைச் சிதைக்கும் ஒரு நச்சுப் பொருளாகும். அத்தோடு மட்டுமின்றி எச்.பைலோரி [[புரதம்|புரதத்தைச்]] சிதைக்கும் நொதி ''(protease)'', வெற்றிடத்துளை உண்டாக்கும் செல்நச்சு ''(vacuolating cytotoxin)'' மற்றும் பாஸ்ஃபோ லிப்பிடுகளைச் சிதைக்கும் நொதி ''(phospholipase)'' ஆகியவற்றைச் சுரப்பதின் மூலமும் செல்களைப் பாதிக்கிறது.
[[Imageபடிமம்:H.pylori_producing_CA(புற்றுநோய்).jpg|thumb|எச்.பைலோரி எவ்வாறு புற்றுநோயை உருவாக்க வல்லது என்பதை விளக்கும் ஒழுக்கு வரைபடம்]]
இவ்வாறாக எச்.பைலோரி இரைப்பையில் நாட்பட்ட [[அழற்சி]]யை ''(chronic inflammation)'' உண்டாக்குகிறது. இந்த நாட்பட்ட அழற்சி நீடிக்குமாயின் அது புற்றுநோயை உண்டாக்குகிறது.
 
== நோயறிதல் ==
[[Imageபடிமம்:pylorigastritis.jpg|thumb|right|இரைப்பையின் புறப்பரப்பு எபிதீலிய செல்களில் குடிகொண்டுள்ள எச்.பைலோரி]]
குருதி முறிபுரதச் சோதனை, மலத்தில் முறிதூண்டி கண்டறியும் சோதனை, கார்பன் யூரியா மூச்சுப் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் உடலைத் துளைக்காமல் செய்யக் கூடிய பரிசோதனைகளாகும். எனினும் அகநோக்கி ''(endoscope)'' மூலம் சிறிதளவு திசுவை எடுத்து விரைவு யூரியேஸ் சோதனை மற்றும் திசுப்பரிசோதனை ''(biopsy)'' போன்றவை செய்வதே சிறந்த அறுதியிடல் சோதனை ஆகும்.
=== கார்பன் யூரியா மூச்சுப் பரிசோதனை ===
நோயருக்கு கார்பன்-14 அல்லது கார்பன்-13 அடையாளமிட்ட (labelled) யூரியா குடிக்கத் தரப்படும். இரைப்பையில் எச்.பைலோரி இருந்தால் யூரியாவை உடைத்து கரியமில வாயுவாக மாற்றும். இந்த அடையாளமிட்ட கரியமில வாயுவை மூச்சுக் காற்றில் கண்டறியலாம்.
=== விரைவு யூரியேஸ் சோதனை ===
யூரியா உள்ள திரவத்தில் அகநோக்கி மூலம் எடுக்கப்பட்ட இரைப்பைத் திசு இடப்பட்டு அமில காரத்தன்மை காட்டிகள் (indicators) மூலம் யூரியேஸ் நொதி இருப்பதை உறுதி செய்யலாம்.
 
== எச்.பைலோரி பரவுதல் ==
இது வாய்-வாய் மூலமும் ''(oro-oral)'' வாய்-மலம் ''(faeco-oral)'' மூலமும் பரவுகிறது. மக்கள் அடர்த்தி மிகுந்த வளரும் நாடுகளில் இது சாதாரணமாகக் காணப்படுகிறது. இந்நாடுகளில் சிறுவயதிலேயே நோய்த் தொற்று ஏற்பட்டு விடுகிறது.
 
== மருத்துவம் ==
எச்.பைலோரி தொற்று உள்ள எல்லோருக்கும் மருத்துவம் தேவைப்படாது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதை அழிக்கும் மருந்து சாப்பிட்டு ஆறு மாதங்களுக்குள் இது மீண்டும் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
ஒரே ஒரு மருந்தை மட்டும் பயன்படுத்தினால் இது அந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி (resistance) பெற்று விடுவதால் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு வகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
[[pl:Helicobacter pylori]]
[[pt:Helicobacter pylori]]
[[ro:Helicobacter Pyloripylori]]
[[ru:Helicobacter pylori]]
[[simple:Helicobacter pylori]]
44,079

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/742304" இருந்து மீள்விக்கப்பட்டது