குருத்து ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி திருத்தம்
வரிசை 14:
என்று கூறி ஆர்ப்பரித்தனர். இப்பாடல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).
 
[[யோவான்|யோவான் நற்செய்திப்படி]] மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்" (காண்க: [[யோவான்|யோவான் 12:13)]]. இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயல்களாகசெயலாக மாறினமாறியது.
 
==கிறித்தவ வழிபாட்டில் குருத்து ஞாயிறு==
வரிசை 62:
மேற்குத் திருச்சபையில் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கன்|ஆங்கிலிக்கன் சபை]], [[லூத்தரன்|லூத்தரன் சபை]] ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.
 
கத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு]] முன்னால் [[எருசலேம்]] நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூலிலிருந்து]] பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். அவர்களைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் செல்வார்கள். இறுதியில் குரு செல்வார். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, "ஓசன்னா" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு [[எபிரேயம்|எபிரேய மொழியில்]] "இறைவா, விடுவித்தருளும்" என்பது பொருள். மேலும் "வாழ்க!" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.
 
குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற [[திருநீற்றுப் புதன்|திருநீற்றுப் புதன்]] என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அவைஅச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]] வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.
 
கிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு "ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/குருத்து_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது