குருதியியல் புற்றுநோய்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
இந்நோயை ஆராய்ந்தறிய [[முழுமையான குருதி எண்ணிக்கை]] (Complete blood count), [[குருதிப்படலம்]] (blood film/smear) என்பவற்றை ஆய்வு செய்தல் மிக அவசியமாகும். ஒளி [[நுண்ணோக்கி]]யில் (light microscope), புற்றுநோய் [[உயிரணு]]க்கள் பல சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். நிணநீர்க்கணுக்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு பொதுவாக [[அறுவைச் சிகிச்சை]] மூலம் [[உடலிழையப் பரிசோதனை மாதிரி]] (biopsy) பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். என்பு மச்சையில் இருந்தும் இவ்வாறான உடலிழையப் பரிசோதனை மாதிரிகள் பெறப்படும். இம்மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி, நுண்ணோக்கியில் சோதனை செய்து, புற்றுநோயின் தன்மை ஆராயப்படும்.
==சிகிச்சை==
குருதிப் புற்றுநோயானது மிகவும் அவசரமாகவும், அவதானமாகவும் சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு நோயாகும். [[குருதி மாற்றீடு]] (blood transfusion) ஒரு வகை சிகிச்சை முறையாகும். முன்னைய மருத்துவ முறைகளில் 'முழுமையான குருதி மாற்றீடு' செய்யப்பட்டது. ஆனால் தற்போது [[இரத்தச் சிவப்பணு]], [[இரத்த வெள்ளையணு]], [[இரத்தத் தட்டு]], [[இரத்த நீர்மம்]] Blood plasma), குருதி உறைவிற்கான காரணிகள் (clotting factors)போன்ற குருதிக் கூறுகள் பயன்படுத்தப்படும். இந்நோய் மேலும் தீவிரமடைகையில் [[வேதிச்சிகிச்சை]] (chemotherapy), [[கதிரியக்கச்சிகிச்சை]] (radiation therapy), [[நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை]] (Immunotherapy]] போன்றனவும் பயன்படுத்தப்படும். அத்துடன் சில நிலைமைகளில் நோயாளியின் உடல்நிலை, வயது என்பவற்றைப் பொறுத்து [[என்புமச்சை மாற்றுறுப்பு ஊன்றுதல்]] (Bone marrow transplantation) சிகிச்சையும் வழங்கப்படும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/குருதியியல்_புற்றுநோய்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது