வடக்கு கீலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: et, fr, ja, ko, ru, uk
வரிசை 12:
[[File:SMS Emden wreck.jpg|thumb|right|300px|''எம்டன்'' போர்க்கப்பலின் சிதைவுகள், 1925]]
[[1914]], [[நவம்பர் 9]] இல், [[செருமனி]]யின் [[எஸ். எம். எஸ் எம்டன் (1906)]] என்ற கப்பல் ஆத்திரேலியாவின் [[எச்மாசு சிட்னி (1912)]] கப்பலினால் தாக்கப்பட்டுப் பாதிப்புக்குள்ளான நிலையில் அதன் தலைவர் [[கார்ல் வோன் முல்லர்]] இக்கப்பலை வடக்கு கீலிங் கரையில் கரை ஒதுக்கி சரணடைந்தார். இக்கப்பலின் மாலுமிகள் சிலர் இத்தீவில் சில காலம் ஒளித்திருந்தனர். இவர்களின் இறந்த உடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு இத்தீவிலேயே புதைக்கப்பட்டன. இக்கப்பலின் சிதைவுகள் இன்னமும் இங்கு காணப்படுகிறது. [[1950]] ஆம் ஆண்டில் [[சப்பான்|சப்பானிய]]ர்கள் இக்கப்பலின் பாவிக்கப்படக்கூடிய உலோகப்பகுதிகளை எடுத்துச் சென்றனர்.
 
===கடற்பறவைகள் வேட்டை===
[[முதலாம் உலகப் போர்|முதலாம்]], [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம்]] உலகப்போர்க் கால இடைவெளிகளில் [[கொக்கோசு மலாய் மக்கள்|கொக்கோசு மலாய்]] மக்கள் 20 பேர் மட்டில் இங்கு சுமார் இரு வாரகாலம் தங்கியிருந்து மரம், தென்னை மற்றும் பறவைகளை தமது [[ஹோம் தீவு]]க்கு எடுத்துச் சென்றுள்ளனர். [[19070கள்]], [[1980கள்|1980களில்]] இங்கு கடற்பரைவைகளை வேட்டையாடுதல் அதிகரித்துக் காணப்பட்டன.
 
===பூலு கீலிங் தேசியப் பூங்கா===
[[1986]] ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் தேசியப் பூங்கா மற்றும் வனத்துறையினருக்கும் கொக்கோசு மலாய் இனத்தவருக்கும் இடையில் ஏற்றுக்கொள்லப்பட்ட உடன்பாட்டின் படி, வடக்கு கீலிங் தீவில் வேட்டையாடுதல் மட்டுப்படுத்தப்பட்டது. [[1989]] இல் ஏற்பட்ட ஜோன் [[சூறாவளி]]யை அடுத்து வடக்கு கீலிங் தீவில் செங்கால் பூபி எனப்படும் கடற்பறவை இனம் பெருமளவு அழித்ததை அடுத்து இங்கு சட்டபூர்வமாக வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டது<ref name=PKNPMP/>.
 
பூலு கீலிங் தேசியப் பூங்கா [[1995]] ஆம் ஆண்டு [[திசம்பர் 12]] இல் நிறுவப்பட்டது. இப்பகுதியை இயற்கை நிலப்பரப்பாகப் பாதுகாக்கவும், பொது மக்களால் இதனை தகுந்த முறையில் பயன்படுத்தவும் என இப்பூங்கா அமைக்கப்பட்டது. [[கடற்பறவை]]களினதும், கடல் [[ஆமை]]களினதும் இனப்பெருக்கத்துக்கு இது இன்றியமையாததாக இருந்தது. கொக்கோசு மினுக்கும்-பட்டை ரெயில் (Cocos Buff-banded Rail, ''Gallirallus philippensis andrewsi'') எனப்படும் பறவையினம், மற்றும் கொக்கோசு ஏஞ்சல்மீன் போன்றவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. இப்பூங்காவுக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_கீலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது