வடக்கு கீலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
===பூலு கீலிங் தேசியப் பூங்கா===
[[1986]] ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் தேசியப் பூங்கா மற்றும் வனத்துறையினருக்கும் கொக்கோசு மலாய் இனத்தவருக்கும் இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் படி, வடக்கு கீலிங் தீவில் வேட்டையாடுதல் மட்டுப்படுத்தப்பட்டது. [[1989]] இல் ஏற்பட்ட ஜோன் [[சூறாவளி]]யை அடுத்து வடக்கு கீலிங் தீவில் செங்கால் பூபி எனப்படும் கடற்பறவை இனம் பெருமளவு அழித்ததை அடுத்து இங்கு சட்டபூர்வமாக வேட்டையாடுதல் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது<ref name=PKNPMP/>.
 
பூலு கீலிங் தேசியப் பூங்கா (''Pulu Keeling National Park'') [[1995]] ஆம் ஆண்டு [[திசம்பர் 12]] இல் நிறுவப்பட்டது. இப்பகுதியை இயற்கை நிலப்பரப்பாகப் பாதுகாக்கவும், பொது மக்களால் இதனை தகுந்த முறையில் பயன்படுத்தவும் என இப்பூங்கா அமைக்கப்பட்டது. [[கடற்பறவை]]களினதும், கடல் [[ஆமை]]களினதும் இனப்பெருக்கத்துக்கு இது இன்றியமையாததாக இருந்தது. கொக்கோசு மினுக்கும்-பட்டை ரெயில் (Cocos Buff-banded Rail, ''Gallirallus philippensis andrewsi'') எனப்படும் பறவையினம், மற்றும் கொக்கோசு ஏஞ்சல்மீன் போன்றவை இங்கு மட்டுமே வாழ்கின்றன. இப்பூங்காவுக்கு முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_கீலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது