பகாய் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
பஹாய் சமயத்தின் நிறுவனர் [[பஹாவுல்லா]] என்பவராவார். அவர் [[பாரசீகம்|பாரசீக]] நாட்டின் [[தெஹரான்]] நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, [[ஒற்றுமை]] மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார்.
 
பஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைவனின் ஓர் [[இறைத்தூதர்]] என்பதை மிகத்தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, ஆற்றிய காரியங்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு [[ஆபிரகாம்]], [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]], [[மோசே]], ஸோராஸ்டர், [[புத்தர்]], [[இயேசு]], [[முகம்மது நபி]] ஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீக [[அவதாரம்|அவதாரங்களின்]] தொடர்வரிசையில் மிகவும் சமீபமாகத் தொன்றியவர் என பஹாய்கள் கருதுகின்றனர்.
 
பஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனுக்குலத்திற்கான [[இறைவன்|இறைவனின்]] விருப்பம் நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களை பிரதிநிதிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனுக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சிநிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறியுள்ளார். உலக [[புனித சாஸ்திரங்கள்|புனித சாஸ்திரங்களில்]] முன்னறிவிக்கப்பட்டுள்ளதுபோல், எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்,” என அவர் எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பகாய்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது