குருத்து ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Minggu Palem
சி சேர்க்கை
வரிசை 61:
மேற்குத் திருச்சபையில் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கன்|ஆங்கிலிக்கன் சபை]], [[லூத்தரன்|லூத்தரன் சபை]] ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.
 
கத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு]] முன்னால் [[எருசலேம்]] நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூலிலிருந்து]] பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். அவர்களைத்பின் குரு செல்வார். அவரைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் செல்வார்கள்.சென்று இறுதியில்தத்தம் குருஇடத்தை செல்வார்அடைவர். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, "ஓசன்னா" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு [[எபிரேயம்|எபிரேய மொழியில்]] "இறைவா, விடுவித்தருளும்" என்பது பொருள். மேலும் "வாழ்க!" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.
 
குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற [[திருநீற்றுப் புதன்|திருநீற்றுப் புதன்]] என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]] வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.
வரிசை 67:
கிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு "ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.
 
==குருத்து ஞாயிறு பவனி பற்றிய நற்செய்தி வாசகம்==
 
இவ்வாண்டு (2011) [[மத்தேயு]] நற்செய்தி (மத் 21:1-11), 2012இல் [[மாற்கு]] நற்செய்தி (மாற் 11:1-10), 2013இல் [[லூக்கா]] நற்செய்தி (லூக் 19:28-40) என்று முதல் மூன்று நற்செய்தி நூல்களிலிருந்தும் மூவாண்டு சுழற்சி முறையில் இயேசு எருசலேமுக்கு பவனியாகச் சென்ற நிகழ்ச்சி பறைசாற்றப்படும்.
 
;மத்தேயு 21:1-11
{{cquote|இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், 'இவை ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார். "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக்கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்ற போது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் என்று பதிலளித்தனர்.}}
==உலக நாடுகளில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்==
 
"https://ta.wikipedia.org/wiki/குருத்து_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது